பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாடை நோக வீசு மாலம்

மாரன் வாளி தூவுமால்

ஆட லோத மார்க்கு மாலென்

ஆவி காக்க வல்லனோ

ஏடு லாவு மாலை சேரி

ராசன் மல்லை நந்திதோள்

கூடினால் லர்வ ராது

கொங்கு விம்மு கோதையே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கோதை சோரிற் சோர்கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவல்

சோதி வெளுக்கில் வெளுமருங்குல் துவளி னீயுந் துவள்கண்டாய்

காது நெடுவேற் படை நந்தி

கண்டன் கச்சி வளநாட்டு

மாத ரிவரோ டுறுகின்றாய்

வாழி மற்றென் மடநெஞ்சே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நெஞ்சாகுல முற்றிங் னேமெலிய

நிலவின் கதிர் நீளெரி யாய்விரியத்

துஞ்சாநய னத்தொடு சோருமிவட்

கருளாதொழிகின்றது தொண்டைகொலோ

செஞ்சாலி வயல்படர் காவிரிசூழ்

திருநாடுடை நந்தி சினக்கலியின்

9

10

வெஞ்சாயல் மறைத்த தனிக்குடையான்

விடைமண்பொறி யோலை விடேல் விடுகே.

11