பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

கட்டளைக் கலித்துறை

377

விடுதிர்கொல் லோவள நாடுடை வீரர சற்குமுன்னின் றிடுதிர்கொல் லோபண்டி றுக்குந் திறையெரி கானத்தும்மை யடுதிர்கொல் லோதிற னந்தியெங் கோனயி ராவதத்திற் படுதிர்கொல் லோபடை மன்னீரென் னாமுங்கன் பாவனையே.12 வஞ்சி விருத்தம்

வனைவார்குழல் வேணியும் வாடைகணீர்

நனைவார்துகி லும்மிவை நாளுமிரா

வினைவார்கழல் நந்திவி டேல்விடுகின்

கனைவார்முர சொத்தது காரதிர்வே.

13

தரவு கொச்சகக் கலிப்பா

அதிர்குரல மணிநெடுந்தேர் அவனிநா ரணன் களிற்றின்

கதிரொளிய வெண்மருப்புக் கனவயிரஞ் செறிந்ததால்

மதுரைகொலோ அடுபுலிக்கோன் நகரிகொலோ மாளிகைசாய்ந் தெதிரெதிரே கெடநின்ற தெவ்வூர்கொ லறியோமால்.

நேரிசை வெண்பா

ஓம் மறைவாண ரொண்பொற் கழல்வேந்தர்

தாம முடிக்கணிந்த தாளிப்புல் - கோமறுகில்

பாவடிக்கீழ்ப் பல்யானைப் பல்லவர்கேர னந்திதன்

சேவடிக்கீழ்க் காணலாஞ் சென்று.

கட்டளைக் கலித்துறை

14

15

சென்றஞ்சி மேற்செங்கண் வேழஞ் சிவப்பச் சிலர்திகைப்ப

வன்றுஞ் சினத்தா ரினமறுத் தார்போலு மஃதஃதே

குன்றஞ்செய் தோள்நந்தி நாட்டங்குறி குறுக்கோட்டையின்மேல் சென்றஞ்சப் பட்டதெல் லாம்படு மாற்றலர் திண்பதியே.

16