பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

அறுசீர்க் கழிடிெலடி ஆசிரிய விருத்தம்

பதிதொறு புயல்பொழி தருமணி

பணைதரு பருமணி பகராநெல்

கதிர்தொகு வருபுனல் கரைபொரு

திழிதரு காவிரி வளநாடா

நிதிதரு கவிகையு நிலமக

ளுரிமையு மிவையிவை யுடைநந்தி!

மதியிலி யரசர்நின் மலரடி

பணிகிலர் வானக மாள்வாரே.

கலி விருத்தம்

ஆட்குலாங் கடற்படை யவனி நாரணன்

தோட்குலா மதுமலர்த் தொண்டை வாய்ச்சியர்

வாட்குலாங் கண்ணினால் வளைத்த மம்மர்நோய் மீட்கலா மடல்கையில் விரவு மாகிலே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

விரவாத மன்னரெலாம் விண்ணேற வெள்ளாற்று

வெகுண்டோன் தொண்டைக்

கிரவாத பரிசெல்லா மிரந்தேற்றும் பாவைமீ

ரெல்லீர் வாடை

வரவாதை யுற்றிருந்து வருந்துவார் பலரென்றும்

வாழி வாழி

பரவாதை நந்திசெங்கோ லிதுவாகி லதுபார்க்கும்

17

18

பரிசுநன்றே

ஷ வேறு

நன்றுந்நெடி தாயவிர் கின்றதிரா

நலிகின்றது மாருத சாலமெனக்

கென்றின்னில வென்னு மிளம்பிறையும்

எரியேசொரி கின்றதியாது செய்கோ

19