பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

நேரிசை வெண்பா

பாடிய நாவலரோ வேந்தரோ பல்பிரவிப்

பீடியன் மாகளிற்றார் பிச்சத்தார்

கூடார்

படையாறு சாயப் பழையாறு வென்றான்

கடையாறு போந்தார் கலந்து.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்ம்

கலங்கொள் அலங்கல் வேல்நந்தி

கச்சி நாட்டோன் அவன் கழல் புலங்கொ ளொளிய நல்லோர்க்கும் புகல்கின் றோர்க்கும் பொன்னார நலங்கொண் முறுவல் முகஞ்சாய்த்து நாணாநின்று மெல்லவே

விலங்கல் வைத்த மின்னோக்கின்

மேலு முண்டோ வினையேற்கே.

கட்டளைக் கலித்துறை

வினையின் சிலம்பன் பரிவும் இவடன் மெலிவு மென்பூந் தினையும் விளைந்தது வாழிதன் மீறுதெள் ளாற்று நள்ளார் முனையுமன்றேக முனிந்தபி ரான்முனை யிற்பெருந்தேன் வனையும் வடவேங் கடத்தார்தண் சாரலின் வார்புனமே

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புனத்துநின்ற வேங்கைமேல்

புகைந்தெ ழுந்த வானையின்

சினத்தை யன்றொ ழித்தகைச்

சிலைக்கை வீரர் தீரமோ

மனத்து ணின்ற வெஞ்சினம்

மலைத்தல் கண்ட திர்ந்தமான்

வனத்த கன்ற திர்ந்ததோ

நந்தி மல்லை யார்ப்பதே.

D

31

32

33

34