பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பதியின் வளர்ந்த நறுந் தொண்டையங்கோன் நந்தி

பல்லவற்கு நேராத பாவையர்தம் பாவை விதியின் விளைவுகண் டியாமிருப்ப தல்லால்

வினைமற்று முண்டோநம் மெல்லோதி மாட்டே.

தரவு கொச்சகக் கலிப்பா

மாட்டாதே யித்தனைநாள் மால்நந்தி வான்வரைத் தோள் பாட்டாதே மல்லையர்கோன் பரியானைப் பருச்சுவடு

காட்டாதே கைதைப் பொழிலுலவுங் காவிரிநீர்

ஆட்டாதே வைத்தென்னை யாயிரமுஞ் செய்தீரே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செய்ய வாய்மிகக் கரியகண் வனமுலை

செறிந்திறு மருங்குற் கொம்

பைய சாலவு மவிரிழை யல்குல

மதுமலர்க் குழலென்றால்

வெய்ய வெப்பவி யாதகுஞ் சரநந்தி வீரவ னிவனைப் போய்

நைய நாமிவ னகரிகை தொழுதில

நம்முயி ரளவன்றே.

கட்டளைக் கலித்துறை

அளவுகண் டாற்குடங் கைத்துணை போலு மரசர்புகும்

வளவுகண் டான்நந்தி மானோ தயன்வையந் தன்னின்மகிழ் தளவுகண் டாலன்ன வெண்ணகை யாற்றமி யேனதுள்ளங்

களவுகண் டார்முகத் துக்கண்க ளாய கயற்குலமே.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குலமரபு மொவ்வாது பயின்று வந்த

குடித்தொழிலுங் கொள்படையின் குறையுங் கொற்றச்

சிலவளவுஞ் சிந்தியாத் தெவ்வர் தேயத்

தெள்ளாற்றிற் செருவென்ற செங்கோல் நந்தி

45

46

47

48