பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

இணைக்குற ளாசிரியப்பா

திருவின் செம்மையும் நிலமக ளுரிமையும்

பொதுவின்றி யாண்ட பொலம்பூட் பல்லவ! தோள்துணை யாக மாவெவ் ளாற்று மேவலர்க் கடந்த வண்ணால்! நந்திநின் திருவரு நெடுங்கண் சிவக்கு மாகில் செருநர் சேரும் பதிசிவக் கும்மே. நிறங்கிளர் புருவந் துடிக்கின் நின்கழல் இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே மையில் வாளுறை கழிக்கு மாகி னடங்கார் பெண்டிர்

பூண்முலை முத்தப் பூண்கழிக் கும்மே கடுவாய் போல்வளை யதிர நின்னோடு மருவா மன்னர் மனந்துடிக் கும்மே

மாமத யானை பண்ணின்

உதிர மன்னுநின் னெதிர்மலைந் தோர்க்கே.

நேரிசை வெண்பா

ஓராதே யென்மகளைச் சொன்னீரே தொண்டைமேல்

பேராசை வைக்கும் பிராயமோ - நேராதார்

61

ஆள்வலியாற் கொண்ட வகன்ஞால மத்தனையும்

தோள்வலியாற் கொண்ட துயக்கு.

62

கட்டளைக் கலித்துறை

துயக்குவித் தான்றுயில் வாங்கவித் தான்றுயில் வித்திவளை வயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யான்மலர்க் காவகத்து முயக்குவித் தான்றுகில் வாங்குவித் தான்முன நின்றிவளை மயக்குவித் தான்நந்தி மானோதய னென்று வட்டிப்பனே

63