பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

ளிருளான மதகரியும் பாய்மாவும்

மிரதமுங்கொண் டெதிர்ந்தார் தம்முன்

மருளாமே நன்கடம்பூர் வானேற

வளைந்துவென்ற மன்ன ரேறே.

ஷ வேறு

ஏறு பாயவிளைவித்த தெல்லாம் வார்க்குங் குமக் கொங்கை வீறு பாயக் கொடுக்கின்ற விடலை யார்கோ வென்கின்றீர்

மாறு பாயப் படைமன்னர் மாவுந் தேருந் தெள்ாற்றில் ஆறு பாயச் சிவந்ததோ ளிணைகா விரிநா டாள்வானே. கலி விருத்தம்

ஆயர் வாய்க்குழல் காற்றுறு கின்றிலள்

ஏயு மாங்குயிற் கென்னைகொ லாவதே

85

86

தேய மார்புகழ்த் தேசபண் டாரிதன்

பாயன் மேல்வரல் பார்த்துநின் றாளுக்கே.

கட்டளைக் கலித்துறை

87

துளவுகண் டாய்பெறு கின்றிலஞ் சென்றினிச் சொல்லவல்ல வளவுகண் டாய்வந்த தாதிகண் டாயடல் வேழமுண்ட விளவுகண் டாலன்ன மேனிகண் டாய்விறன் மாரன்செய்த களவுகண் டாய்நந்தி மல்லையங் கானல் கழிக்கம்புளே. 88 இவையல்லாமல், சில பிரதிகளில் அதிகமாகச் செய்யுட்கள் காணப்படுகின்றன. அவற்றில் நமது ஆராய்ச்சிக்கு வேண்டி ய சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன்.

நேரிசை வெண்பா

இந்தப்புவியி லிரவலகுண் டென்பதெல்லாம்

அந்தக் குமுதமே யல்லவோ - நந்தி

தடங்கைபூ பாலன்மேற் தண்கோவை பாடி

அடங்கப்பூ பாலரா னார்.

இதனால் நந்திவர்மன்மீது கோவைப் பிரபந்தமும் பாடப்

பட்டிருந்ததாகக் கருதலாம்.