பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

கீழடங்கி யிருந்தான். ஸ்ரீமாறனுடைய சிறப்புப் பெயராகிய ஸ்ரீவல்லபன் என்னும் பெயரைக் கோக்கருநந்தடக்கனும் சூட்டிக்கொண்டான். பேரரசன் பெயரை, அவனுக்குக் கீழடங்கிய சிறறரசர் சூட்டிக் கொள்வது அக்காலத்து மரபு.

கோக்கருநந்தடக்கன் கி.பி. 857-ல் அரசனானான். பாண்டியன் ஸ்ரீமாறனுடைய மகனான விக்கிரமாதித்திய வரகுண பாண்டியன் (இரண்டாம் வரகுணன்) காலத்திலும், கோக்கருநந்தடக்கன் இருந்தான்.

கீழ்க்கண்ட இரண்டு சாசனங்கள், இவனது இரண்டாம் ஆண்டில், கி. பி. 859-இல் எழுதப்பட்டவை. திருவாங்கூரைச் சேர்ந்த திருவிடைக் கோடு என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலில் இச்சாசனங் கள் உள்ளன. இவை வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன.

I

சாசன வாசகம்'

1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கருந்நநந்தடக்க (ற்)கு

2. ச் செல்லா நின்ற யாண்டு இரண்டு இத

3. னெதிர் பன்னிரண்டு இவ்வாண்டு திருடைக்கோ 4. ட்டு மாதேவர்க்கு திருநொந்தாவிளக்கு

5. நியதிப்படி எரிவதாக செழிய

6. ந்த... உழக்கு நெய் அட்டுவதாக ஊ

7. ரும் இண்...க(ளு)ம் உள்ளிருக்க சடை... 8. இவன் பணிக்கைய்யில் விட்டபசு

9. சாகாமூவாப் பேருருவாக அட்டின பசு 10. இருப்பத்தஞ்சு முக்குளத்து யா 11. ன் புல்ல முருகனும்

..

1. T.A.S. Vol.I. P. 14.