பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

П

சாசன வாசகம்'

1

1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கருநந்தடக்கர்க்கு செ

2. ல்லாநின்ற யாண்டு இரண்டு இ

3. தனெதிர் (இ) ருபது இவ்வாண்டு பிர

4. ட்டாசி திங்கள் திருவிடைக் கோட்

5. டு மாதேவற்கு திருநந்தாவி

6. எக்கு நியதிப்படி யுழக்கு

7. நெயெரி ...

399

III

கோக்கருநந்தடக்கன் செப்பேட்டுச் சாசனம்

கருநத்தடக்கன், தனது ஒன்பதாவது ஆண்டில் விஷ்ணு படாரருக்கு (திருமாலுக்கு) ஒரு கோயில் அமைத்து அதற்கு வேண்டிய நில புலங்களைத் தானம் செய்தான். அந்தத் தானம் எழுதப்பட்ட செப்பேடு இது. இது, கலியுகம் பிறந்த 1449087-ஆம் நாள் எழுதப்பட்டது. அதாவது கலியுக ஆண்டு 3967-இல் (கி.பி.866 ஜூலை மாதத்தில்) எழுதப்பட்டது. திருவனந்தபுரத்து ஹுசூர் ஆபீஸில் இந்தச் செப்பேடுகள், இருந்தபடியால் இதற்கு ஹுசூர ஆபிஸ் செப்பேடுகள் என்று பெயர் கூறப்பட்டது.

இந்தச் சாசனத்தின் சிறப்பு என்ன வென்றால், அக்காலத்தில் சேரநாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்தில் எழுதப்படாமல், அக்காலத்துப் பல்லவ அரசர் தொண்ட மண்டலத்தில் எழுதி வந்த பல்லவத் தமிழ் எழுத்தினால் எழுதப்பட்டிருப்பதுதான்.

1. T.A.S. Vol.I. P. 15.