பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

1.

சாசன வாசகம்1

(ழதல் ஏடு, ழன்பக்கம்)

ஸ்வஸ்திஸ்ரீ கலியுகக் கோட்டு நாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதியிரத்து எண்ப

2. த்து ஏழு சென்ற நாள் ஸ்வஸ்திஸ்ரீ கோக்கருநந்தடக் கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இ

3. ந்நாளால் முடாலநாட்டுப் பசுங்குளத்துப்படு நிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி

4. விளை என்னு நிலம் இவைகளுக்கு அடிக்கடி நிலங் குடுத்து மாறிக்கொண்டு இந்நிலம் பிடி சூ

5. ழ்ந்து ஸ்ரீகோயில் எடுத்து விஷ்ணுபட்டாரகரை பிரதிஷ்டை செய்து பார்த்திவ சேகரபுரம் எ

6. ன்று பேர் இட்டு காந்தளூர் மத்யார்த்தியால் தொண்ணூற்று ஐவர் சட்டர்க்கு சாலையுஞ் செய்தா

7. ன் ஸ்ரீ கோக்கருநந்தட்டன் அகநாழிகைச் சென்னடைக்கு அட்டின பூமி பொழி சூழ்நாட்டு குராத்

(ழதல் ஏடு, பின்பக்கம்)

8. தூரில் இடைக்குராத்தூர் வயலுங்கரையும் உண்ணிலம் ஒழிவின்றி மேற்பாதி மீதாட்சி உள்ளட

9. ங்க அட்டிக்குடுத்தான் செங்கழு நாட்டு ஐம்மாக் கொல்லை மேற்கொல்லை வயலுள் வெஞ்சைக் குளத்தின்

10. கீழ் வெஞ்சைப்பொறை தடி ஒன்றும் சாயறைக்கலம் பாடு தடி மூன்றும் நெடுமட்குளத்தின் கீழ்

11. நரியறை தடி ஒன்றும் கொற்றனறை தடி ஒன்றும் குளவறை தடி ஒன்றும் நீரறை தடி ஒன்

12. று மாயிலறை தடி ஒன்றும் தலைவிலைச் செய் தடி இரண்டும் எருமை யறையுற்துடவர் இரண்டே

1. T.A.S. Vol. I. P. 5-9.