பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

405

6. ண்ட மும்பட்டு கடமையுங் குடுப்பது தேவர் சொன்னடையும் பதினாழிச் சாலையும் எவ்வழக்கு சொல்லியும் வி

7. லக்கப் பெறார். விலக்குவார் நியதி கழஞ்சு பொன் தண்டம் ட்டன்றிச் சாலை உண்ணப் பெறார் பணிமக்கள் சட்டரை 8. ப் பிழைக்கப் பேசுவார் ஒருகாசு தண்டப்படுவது. இப்பரிசு தெங்கநாட்டு வெண்ணீர் வெள்ளாளன் தெங்க நாடு கிழவ (ஐந்தாம் ஏடு, பின்பக்கம்)

9.

10. ...

11.

12....

1

13. னாயின சாத்த முருகன் ஆணத்தியாக ஓமாயனாட்டுப் பாகோட்டுப் பாப்பிகை கோட்டு திரையன் ஒமாயனாடு கிழவ 14. னாயின சிங்கக்குன்றப் போழன் எழுத்து ஸ்வஸ்திஸ்ரீ

1.

இந்தச் சாசனத்தின் இடையிலே 9 முதல் 12-ஆவது வரி வரையில் வடமொழிச் செய்யுள் எழுதப்பட்டிருக்கிறது. அதன் கருத்து இது:-

ஸ்வஸ்தி ஸ்ரீ தன்னுடைய புகழினாலும் அருளினாலும் ஓங்கி, நந்தனையும் யாதவ குலத்தையும் உயர்த்தி, உலகத்தைத் துன்பம் அடையாமல் காத்து, வல்லமையுள்ள பகைவரைத்தன் வளரும் ஒளி யினால் அழித்து, தன் குருவினிடம் வணக்க முள்ளவனாய் பிராமணர் களால் விசுவாசிக்கப்படுகிற ஸ்ரீவல்லபன் நமக்கு நன்மையை அளிப்பானாக. (இக் கவி, கண்ணபிரானையும் ஸ்ரீவல்லபன் என்னும் பெயரையுடைய கருநந்தடக்கனையும் சிலேடையாகக் கூறுகிறது.)

ஸ்வஸ்திஸ்ரீ யசோதைக்குப் பிறந்து அவளால் வளர்க்கப்பட்டு, நந்தனையும் யாதவகுலத்தையும் மேன்மைப்படுத்தி, துன்பம் அணுகா தபடி பசுக்களைக் காத்து, தன்னிடம் அன்புமிக்க புள்ளரசனின் (கருடனின்) அன்பை வளரச்செய்து, பலிச்சக்கரவர்த்தியை அழித்துப் புகழெய்திய அந்த ஸ்ரீவல்லவன் (திருமகள் கணவன்) நமக்கு மேன்மையை அளிப்பானாக. (இதில் ஸ்ரீவல்லவன் என்பது கண்ண பிரானையும் கருநந்தடக்கனையும் சிலேடையாகக் குறிக்கிறது)