பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

407

தோப்புகளும் தென்னந் தோப்புகளும் காணப் படுகின்றன. அத் தோப்புகளில் கமுகம்பாளையும் தென்னம்பாளையும் வெடித்து மலர்ந்த பூக்களில் காளைவண்டுகள் தேன் குடித்து ரீங்காரம் செய்து பாடுகின்றன. மயிர்கள் தோகையை விரித்து ஆடுகின்றன. தெளிந்து பாயும் குளிர்ந்த ஆற்று நீரிலே இளமங்கையர் சிலர் நீரைக்குடைந்து ஆடிக் களிக்கிறார்கள்.

அதோ பாருங்கள்! பச்சைப் பசேலென்றிருக்கும் நெல் வயல்கள். அதற்கப்பால், செழிப்பாக வளர்ந்துள்ள கரும்புச் சோலைகள். கம்புச்சோலைகளுக்கப்பால் வானுற உயர்ந்து வளர்ந்து பச்சைப் பசேலென்றிருக்கும் மூங்கிற் காடு. இந்தக் கண்ணுக்கினிய இயற்கைக் காட்சியைக் கண்டு களியுங்கள்.

ஆற்றங்கரையை நோக்குங்கள். நீர்ப்பறவைகளான நாரைகளும் கொக்குகளும் நீரில் ஓடி ஆடுகின்றன. கெண்டை மீன்களும் கயல்மீன்களும் துள்ளி விளையாடுகின்றன. ஆற்றங்கரை ஓரத்தில் பூத்துள்ள குவளை மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ரீங்கார ஓசை செய்து பண்பாடுகின்றன.

66

முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று

மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரிபொழில்சூழ் கள்வாய கருங்குவளை கண்வளரும் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே”

"அரும்புயர்ந்த அரவிந்தத் தனிமலர்கள் ஏறி

66

அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே கரும்புயர்ந்த பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே'

99

'பாளைபடு பைங்கமுகின் சூழல் இளந்தெங்கின்

படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக் காளைவண்டு பாடமயிலாலும் வளர் சோலைக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே”

"குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியும் துறைவாய்க்

கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரை மேல்