பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

66

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

கருமணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே'

தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே தடந்தாள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே கழைதழுவித் தேன்தொடுக்குங் கழனிசூழ் பழனக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே'

"தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்

துறைக் கெண்டை மிளிர்ந்துகல் துள்ளிவிளையாடக் காலிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே'

99

சீபர்ப்பதம் என்பது ஸ்ரீபர்வதம் என்னும் மலை. அங்குள்ள குறிஞ்சி நிலத்துத் தினைப்புனக் காட்சியைச் சொல்லோவியமாகத் தீட்டுகிறார் சுந்தரர். தினைப்புனத்தில், தினைப் பயிர் விளைந்து கதிர் முற்றியிருக்கின்றன. கிளிகள் கூட்டமாக வந்து தினைக்கதிரைக் கொத்தித் தின்கின்றன. குறச் சிறுமி பரண்மேல் இருந்து கிளிகளை ஒட்டிக் காவல் காக்கிறாள். தட்டையை ஒலித்துக் கிளிகளைத் துரத்துகிறாள். "மன்னிப் புனங்காவல் மடமொழியாள் புனங்காக்கக் கன்னிக் கிளிவந்து கவைக்கோலிக் கதிர்கொய்ய என்னைக்கிளிமதியா தென்று எடுத்துக் கவண்ஒலிப்பத் தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே'

“மையார் தடங்கண்ணாள் மடமொழியாள் புனங்காக்கச் செவ்வே திரிந்தாயோ எனப்போகாவிட விளிந்து கைபாவிய கவணால் மணிஎறிய விரந்தோடிச் செவ்வாயினகிளி பாடிடுஞ் சீபர்ப்பத மலையே"

தினைப்புனங் காக்கும் குறப்பெண் ஒருத்தி கிளிகளிடத்தில் அன்புள்ளவள். “பாவம்! கிளிகளும் கொஞ்சம் தினையைத் தின்னட்டுமே என்று சிறிது கருணை காட்டுகிறாள். கிளிகளோ, இவள் நம்மைத் துரத்தவில்லை. இவள் வயலிலேயே தினை தின்போம் என்று கருதிக் கூட்டங் கூட்டமாக வந்து தினையைக் கொத்தித் தின்றன. அப்போது அவள் அவற்றைத் துரத்துகிறாள். இதனைச் சுந்தரர் சொல்ஓவியம் தீட்டுகிறார்.