பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

வாழையின் கனிதானும் மதுவிம்மு

411

வருக்கையின் சுளையும்

கூழைவானரம் தம்மில் கூறிதுசிறிது

எனக் குழறித்

தாழைவாழையந் தண்டார் செருச்செய்து

தருக்கு வாஞ்சியம்

நீர்வளத்தின் மிகுதியினாலே வாளைமீன், மலங்கு மீன், கயல் மீன், வரால் மீன், சேல் மீன் முதலிய மீன்களைக் கூறுகிறார். அந்நீர் நிலைக்கு அருகில் உள்ள கமுது முதலிய தோப்புகளையும் கூறுகிறார்.

66

'வாளைபாய மலங்கு இளங்கயல் வரிவரால் உகளும் கழனிப் பாளைஒண் கமுகம் புடைசூழ் திருப்பனையூர்

99

சேற்றில் நடந்து சென்ற எருமைகள் நீரிலே சென்று படிய, நீரில் இருந்த சேல் மீன்களும் வாளை மீன்களும் அஞ்சிப் பாய்ந்தோடின.

“செங்கண் மேதிகள் சேடெறிந்து தடம்படிதலில் சேலினத்தொடு

பைங்கண் வாளைகள் பாய்பழனத் திருப்பனையூர்'

எருமைகள் குளத்தில் சென்று வீழ்ந்து நீரில் படிந்தன. அதனால், கயல் மீன்கள் கூட்டமாக ஓடித் தாமரை மலர்களின்கீழ் ஒளிந்தன. அதனால், பூக்கள் அசைய, அவற்றில் மொய்த்திருந்த வண்டுகள் பறந்து சுழன்றன. இதனைக் கூறுகிறார்.

66

கருமேதி புனல் மண்டக் கயல்மண்டக்

கமலம் களிவண்டின் கணம்இரியும்

கலையநல்லூர் காணே

தாமரைக் குளத்தில் வாளைமீன் துள்ளிக் குதித்தது. தாமரைப் பூவின்மேல் நண்டு படுத்து ஓய்வு கொண்டது. இவ்வியற்கைக் காட்சியைக் கூறுகிறார்.

66

"துள்ளிவெள்ளி வாளைபாய அயல்தோன்றும்

தாமரைப் பூக்கள்மேல்

புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும்

புறம்பியந் தொழப் போதுமினே’