பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

என்னும் நாலடியாரையும் நினைவுறுத்துகிறது.

66

"மற்றே லொரு பற்றில னெம்பெருமான்

வண்டார் குழலாள் மங்கை பங்கினனே அற்றார் பிறவிக்கடல் நீந்தியேறி யடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே

இச்செய்யுள்,

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்

என்னும் திருக்குறளை நினைவுறுத்துகிறது.

66

‘ஓடுபுனற் கரையா மிளமை யுறங்கி விழித்தா லொக்கு மிப்பிறவி

வாடியிருந்து வருந்தல் செய்யா தடியேன் உய்யப்போவதோர் சூழல் சொல்லே”2

இச்செய்யுள்,

2

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"

என்னும் குறளை நினைவுறுத்துகிறது.

“மகரக் குழையாய் மணக் கோலமதே பிணக் கோலமதாம் பிறவி யிதுதான் அகரமுதலின் எழுத்தாகி நின்றாய் அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே

இச்செய்யுள்,

66

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

99

என்னும் திருக்குறளைக் கூறுவது காண்க.

993

1. திருநெல்வேலி அறத்துறை 3.

3. திருநெல்வேலி அறத்துறை 7.

2. திருநெல்வேலி அறத்துறை 4.