பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

419

போரில் பல்லவ தேச மன்னன் சீவகன் பக்கல் நின்று போர் செய்தான் என்றும் சிந்தாமணி கூறுகிறது. ‘பல்லவ தேயம்' என்றும், ‘பல்லவ மன்னன்' என்றும் இதில் கூறப்படுவது, தமிழ் நாட்டுப் பல்வ தேசத்தை யும் தமிழ்நாட்டை அரசாண்ட பல்லவ மன்னனையும் அன்று. என்னை? பல்லவர் தமிழ்நாட்டிற்கு வந்து காஞ்சீபுரத்தைத் தலை நகராகக் கொண்டு அரசாளத் தொடங்கியது கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் என்று சரித்திரம் கூறுகிறது. சீவகன், வர்த்தமான மகாவீரர் காலத்திலே வாழ்ந்திருந்தவன். வர்த்தமான மகாவீரர் கி. மு. 6-ஆம் நூற்றாண்டிலே (கி.மு. 599-527) வாழ்ந்திருந்தவர். எனவே, கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சீவகன், கி.பி. 3-ஆம் நூற்ாண்டிற்கப் பின்பிருந்த பல்லவ தேசத்தரசன் மகளை மணந்திருக்க முடியாது. ஆகவே, சிந்தாமணியில் பல்லவ தேசம் என்று கூறப்படுவது, தமிழ் நாட்டிலிருந்த பல்லவ தேசம் அன்று என்பது வெள்ளிடைமலை போல விளங்குகிறது.

ஆனால், சிந்தாமணியில் கூறப்பட்ட பல்லவ நாடு என்பது எது? இப்போது ‘ஈரான்' என்று வழங்கப்படுகிற பழைய பாரசீக தேசத்தில் பல்லவ அரசர்கள் இருந்தார்கள். 'அவர்கள் பஹ்லவர் (Pahlavas) என்று பெயர் பெற்றிருந்தார்கள். ஆகவே, பாரசீகத்துப் பஹ்லவருக்கும் தமிழ் நாட்டுப் பல்லவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. சிந்தாமணியில், பல்லவ தேசம் என்று கூறுப்படுவது, பாரசீகத்துப் பஹ்லவ தேசமாக இருக்கக் கூடும். (பஹ்லவர் என்னும் பெயர் தமிழிற் பல்லவர் என்று வழங்கப்பட்டது.) ஆகவே, சிந்தாமணிக் காவியம் இயற்றப்பட்ட காலத்தை அறிவதற்கு இது துணைசெய்யவில்லை. வேறு சான்றுகளைக்கொண்டு இதன் காலத்தை ஆராய்வோம்:

‘வீரசோழியம்’ என்னும் இலக்கண நூலைப் புத்தமித்திரனார் என்பவர் இயற்றினார். இதற்கு உரை எழுதியவர் புத்தமித்திரனாரின் மாணவராகிய பெருந்தேவனார் என்பவர். எனவே, நூலாசிரியரும் உரை ஆசிரியரும் சம காலத்தவராவர். வீர சோழியம், புத்மித்திரனாரை ஆதரித்த வீரசோழன் என்னும் வீர நாசேந்திரன் பெயரால் இயற்றப் பட்டது. வீரசோழன் என்னும் வீர ராசேந்திரன், கி.பி. 1063 முதல் 1070 வரையில் சோழநாட்டை ஆண்டவன். எனவே, வீரசோழியம் இயற்றப் பட்ட காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டு என்பதில் ஒரு சிறிதும் ஐயம் இல்லை.

வீரசோழிய உரையாசிரியர், தாம் எழுதிய உரையிலே, பல நூல்களிலிருந்து பல செய்யுட்களையும் சூத்திரங்களையும் மேற்கோள்