பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

'தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயிலத் தண்பூம் கண்ணொடு புருவம் கைகால் கலையல்குல் நுசுப்புக் காமர் ஒண்ணுதல் கொண்ட ஆடல் தொட்டிமை யுருவம் நோக்கி வெண்ணெய்தீ யுற்ற வண்ணம் ஆடவர் மெலிகின் றாரே’

‘பாடலொ டியைந்த ஆடல் பண்ணமை கருவி மூன்றும் கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த முற

ஓடரி நெடுங்கண் அம்பால் உளங்கிழிந் துருவ எய்யா வீடமை பசும்பொற் சாந்தம் இலயமா ஆடுகின்றாள்.'

423

தேசிகப்பாவை இவ்வாறு அரங்கத்தில் ஆடும்போது, விருந்திவனான சீவக குமரன்மேல் அவளுடைய பார்வை சென்றது. இளமையும் வனப்பும் வீரமும் உடைய அரசகுமரனின் தோற்றம் அவளுடைய மனத்தைக் கவர்ந்தது. நாட்டியம் ஆடிக்கொண்டே அவள் அடிக்கடி தன்னுடைய பார்வையை அவன்மேல் செலுத்தினாள். கலைகளில் வல்லவனான சீவககுமரனும் அவளுடைய ஆடலிலும் பாடலிலும் அழகிலும் ஈடுபட்டு அவளை நோக்கினான்.

‘வாணுதல் பட்டம் மின்ன வசர்குழை திருளில் வீசப் பூண்முலைப் பிறழப் போற்றோடு இடவாயில்

2

மாணிழை வளைக்கை தம்பால் வட்டணை போக்கு கின்றாள் காண்வரு குவளைக் கண்ணாள் காளைமேல் நோக்கினாளே தேசிகப்பாவை சீவக்குமரனைக் காதலித்தாள். அவனையல்லா மல் வேறு ஒரு வரையும் விரும்புவதில்லை என்று உறுதி செய்து கொண்டாள். ‘கணிகை மகளுக்குப் பொன்னைக் கொடுத்தால் அவள் தன் கற்பை விற்றுவிடுவாள் என்று கூறுவார்கள். அந்தச் சொல் என்னிடத்தில் பொய்யாகும்' என்று தனக்குள்ளே கூறிக்கொண்டாள்.

'கன்னிமை கனித்து முற்றிக் காமுறக் கமழுங் காமத்து

இன்னறுங் கனியைத் துய்ப்பான் ஏந்தலே பிறர்கள் இல்லை பொன்னினால் உடையுங் கற்பென்று உரைத்தவர் பொய்யைச் சொன்னார் இன்னிசை இவற்கல் லால்என் நெஞ்சிடம் இல்லை என்றாள்3

தேசிகப்பாவையும் சீவககுமரனும் ஒருவரையொருவர் விரும்பி னார்கள். ஆனால் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்பு இல்லை. அவளோ கணிகைப் பெண். அவனோ அரசகுமரன் அரண்மனையில்