பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

கம்பர் தமிழில் இராமாயண காவியத்தை இயற்றினது போலவே சரளர் ஒரிய பாஷையில் பாரதத்தையும் ராமாணத்தையும் காவியமாக இயற்றிப் புகழ் பெற்றார் சரளர் கி.பி. 15-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருந்தார்.

கம்பர் காளிதேவியின் அருள் பெற்று கவிபாடும்புலவர் ஆனார். சரளதாசரும் சரசதேவியின் அருள்பெற்று கவிபாடும்புலவரனார். கம்பர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டது போல சரளரும் தம் பரசுராமன் என்பவரால் ஆதரிக்கப்படார் கம்பர் தாம் பாடிய ராமாயணத்தில் சடையப்ப வள்ளலைப்புகழ்ந்திருப்பதுபோல், சடையப்ப சரளதாசரும் தாம் இயற்றிய பாரத காவியத்தில் தம்மை யாதரித்த பரசுராமனைப் பல இடங்களில் புகழ்ந்திருக்கிறார்.

கம்பர் இராமாயணக் கதையை தமிழ் நாட்டு மரபுக்கும் சூழ் நிலைக்கும் ஏற்றபடிச் சில இடங்களில் மாற்றியமைத்தது போலவே சரளரும் தமது ஒரியா நாட்டு மரபுக்கும் நிலைக்கும் ஏற்ப தமது பாரதக் கதைகள் மாற்றி அமைத்துக் கொண்டார். இவ்வாறு கம்பருக்கும் சரள தாசருக்கும் முக்கியமான ஒற்றுமை உள்ளன. எனவே கம்பரை ஒரி நாட்டுக் கரளதாசர் என்றும், சரளதாசனை ஒரியா மொழியில் பல இரா மாயண பார தங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அவைகளில் எல்லாம் முதன்மைபெற்றிருப்பதுசரளதாசரின் பாரத இராமாயணங் களேயாகும். சரளரின் காவியங்கள் ஒரியா மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன. கம்ப இராமாயணமும் தமிழ்நாட்டில் அப்படித்

தானே?

கம்பருக்கு சமஸ்கிருதம் தெரியாது. சமஸ்கிருதம் படித்தவர் களைக் கொண்டு கம்பர் வால்மீகி இராமாயணத்தை அறிந்து கொண்டார்; அதுபோலவே சரளதாசருக்கும் சமஸ்கிருதம் தெரியாது. சமஸ்கிருதம் படித்தவர்களைக் கொண்டு சரளர் பாரத இராமாயணங்களைத் தெரிந்து கொண்டார்.

சரளதாசர் ஒரியா பாஷையில் பாரதத்தையும் இராமாயணத்தை யும் இயற்றினார் எனக் கூறினோம். சண்டிபுராணம், விலங்கை இராமாயணம் என்னும் காவியங்களையும் இவர் எழுதியிருக்கிறார். விலங்கை இராமாயணத்தை இவர் அற்புத இராமாயணத்திலிருந்து எழுதினார். விலங்கை இராமாயணத்தின் சுருக்கம் இது.