பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

கூறுவாரானால், அவரை ஆராய்ச்சிக்குத் தகுதியுள்ளவர் என்று ஏற்றுக்கொள்ளலாமா? அவர் கூறுவது ஆராய்ச்சியாகுமா?

ம்

ஒரு மொழியிலிருந்து ஒரு சொல்லைக் கொள்ளவேண்டு மானால், அது அயல்நாட்டு மொழியாக இருந்தாலும், அச்சொல் சமஸ்கிருத மொழியில் சென்ற பிறகுதான், சமஸ்கிருதத்திலிருந்து மற்ற மொழிக்குக் கொள்ளவேண்டும் என்று மூடத்தனமான ஒரு கொள்கை, சமஸ்கிருதத்தில் மூடபக்தியுள்ள, ஆராய்ச்சியற்ற சில பண்டிதர்களின் கொள்கையாக இக்காலத்திலும் இருந்து வருகிறது. சமஸ்கிருத மொழியைப் பற்றி இருந்து வருகிற சில மூடக்கொள்கைகளில் இதுவும் ஒன்று. இத்தகைய மூடக்கொள்கை, ஆராய்ச்சி இல்லாத சமஸ்கிருத பண்டிதரிடத்தில் இருப்பது பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் இடத்தில் அமர்ந்துகொண்டு ஆராய்ச்சி செய்கிறேன் என்று நூல் எழுதுகிறவர்கள், சிறிதும் ஆராய்ந்து பாராமல் இவ்வாறு எழுதுவது அறிவுடைமையல்ல. இது ஆராய்ச்சியாகாது.

சமஸ்கிருதத்தில் இச்சொல் வருவதற்குச் சில நூற்றாண்டுக ளுக்கு முன்னமேயே தமிழருக்கும் கிரேக்கருக்கும் நேரடியான நெருங்கிய தொடர்பு இருந்த காலத்தில் ஓரை என்னுஞ் சொல் (அது கிரேக்கச் சொல்லாக இருந்தால்) தமிழில் கலவாமல் இருந்தது என்றும், பிறகு அச்சொல் சிலநூற்றாண்டுகளுக்குப் பிறகு வடமொழியில் சென்ற பிறகு தமிழில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் இந்த ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுவதை சமஸ்கிருத மூடாபிமானம் என்று ஒதுக்கித் தள்ளுவதைத் தவிர, அறிவுடையவர் யார்தான் ஏற்றுக் கொள்வர்?

ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து தமிழில் வந்திருந் தால் அச்சொல் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டிலேயே தமிழில் கலந்திருக்க வேண்டும். அச்சொல்லை ஆள்கிற தொல்காப்பியமும் கி.பி. முதல் நூற்றாண்டிலே தோன்றியிருக்கவேண்டும் என்று இவர்கள் கூறி யிருந்தால் அதை ஒருவாறு ஏற்றுக்கொள்ள இயலும். அப்படியில் லாமல் “ஓரை”யைக் கூறுகிற தொல்காப்பியம் கி.பி.5ஆம் நூற்றாண்டிலோ அல்லது 6ஆம் நூற்றாண்டிலோ தோன்றியது என்று பொருத்தமற்ற செய்தியைக் கூறும் இவர்கள் ஆராய்ச்சியை என்னென்பது?

ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து சமஸ்கிருத மொழியில் கி.பி.5ஆம் நூற்றாண்டில் சென்றிருக்கலாம். அதுபற்றி நமக்கு இங்கு ஆராய்ச்சி இல்லை. தமிழிலே அச்சொல் எந்தக்