பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

ஆனந்தக்கூத்தர்:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

வீரைநகர் ஆனந்தக்கூத்தர் திருக்காளத்திப் புராணம் பாடியவர். இவர் தம்முடைய அவையடக்கத்தில், 'பாம்பின் வாயிலிருந்து உமிழப் பட்டது மாணிக்கக்கல் என்பதற்காக மாணிக்கக்கல்லைத் தள்ளிவிடு வோர் இலர்; அதுபோல கற்றறியாத சிறியேன் சொல்லிய காளத்திப் பெருமான் புராணத்தை உலகோர் தள்ளிவிடாமல் ஏற்றுக்கொள் வார்கள்' என்று கூறுகிறார்.

தீயவிட அரவுமிழ்ந்த செஞ்சுடர் மாணிக்கம் அதன்

வாயினில் வந் ததுஎன்னத் தள்ளுவரோ, மகிழ்ந்து கொள்வர் ஆயதனால், தூயதமிழ் அறியாத சிறியேன் சொல்

நாயகன்நன் சரிதமென் நயந்துகொள்வர் நல்லோரே,

உமாபதி சிவாசாரியர்:

கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியர் சேக்கிழார் சுவாமிகள் புராணம் பாடினார். இந்தப்புராணத்துக்குத் திருத்தொண்டர் புராண வரலாறு என்னும் பெயரும் உண்டு. சேக்கிழார் புராணத்தில் இவர் கூறுகிற அவையடக்கச் செய்யுட்கள் இவை:

ஊர்க்கடலை யிவனெனவந் துதித்தநான் ஒங்குதமிழ் நூற்கடலைக்கரைகண்டு நுவல நினைக்குமது திருப் பாற்கடலைச் சிற்றெறும்பு பருக நினைப்பது போலும் நீர்க்கடல் சூழ் மண்ணுலகை நிறுக்க நினைக்கும தொக்கும். (ஊர்க்கடலை= சாம்பற்புழுதி, தமிழ்நூற்கடல் = பெரிய புராணம்)

தேவுடனே கூடியசொற் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த பாவுடனே கூடியவென் பருப்பொருளும் விழுப்பொருளாம் கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர் புகுதும்

பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால்.

அமிதசாகரர்:

யாப்பருங்கலக் காரிகை என்னும் செய்யுளிலக்கண நூலை இயற்றிய அமிதசாகரர் கூறுகிற அவையடக்கம் இவை.