பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

அரிச்சந்திரவெண்பா

அரிச்சந்திரவெண்பா பாடிய புலவர் பெயர் தெரியவில்லை அவர் அவையடக்கம் இவ்வாறு கூறுகிறார்.

கைத்தலங்க ளில்லான் கடைந்து பயோததியைப் புத்தமிழ்தம் தானளித்தல் போல்மணிற்சீர்

-

வைத்த

அரிச்சந் திரன்சரிதை யாய்ந்துணர்வொன் றில்லேன்

யீதரட்டிச் சொலுமிச் செயல்.

(கைத்தலங்கள் = கைகள். பயோததி = பாற்கடல்) =

கற்றுணர்ந்த மேலோர் கருதார்கள் இந்நூலில் குற்றமுள வேனுமிது கொள்வரால்

-

முற்றுலகில்

நெல்லுக் குமியுண்டு. நீர்க்கு நுரையுண்டு, புல்லிதழ் பூவிற்கு முண்டு.

வீரகவிராயர்

அரிச்சந்திரபுராணம் பாடிய நல்லூர் வீரகவிராயர் கூறும் அவை யடக்கம் இவை.

நீர்கொள்வார் பாலோடு நேர்உற்றால், பதர்கொள்வார் நெல்லோ டுற்றால், நார்கொள்வார் பூவுற்றால், வேர்கொள்வார் அதிற்சிறிது நறையுண் டாயின்

சீர்கொள்வார் புன்சொல்லும் செஞ்சொல்லும் சேர்ந்ததொன்றில், சேரப்

புன்சொல்

ஆர்கொள்வார் என்பதுசற் றறியாமல் சிறியேன்நா வசைக்கின் றேனே. (வேர்= வெட்டிவேர், விலாமிச்சைவேர் முதலியன, சேர = ஒருங்கே) புருடனார்க் கேந்திழையார் பொருள்உரைப்ப தெனப், பிறர்தம் பொருளே வவ்வும்

திருடனார் மேலவர்க் கறம்உரைப்ப தெனச்சிறிய தெள்கு துள்ளிக் கருடனார்க் குப்பறவை கற்பிப்ப தென, அனந்தம் கண்ணுள் ளார்க்குக் குருடனார் வழிகாட்டல் எனப், பெரியோர் முன்சிறியேன் கூறல்

உற்றேன்;