பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

திராவிட மொழிச் சொற்களும் காணப்படுகின்றன என்று மொழி நூல் ஆராய்ச்சிக்காரர்கள் கூறுவது இங்குக் கருதத்தக்கது. அவர்களிடத்தி லிருந்து கிரேக்கர் இச் சொல்லைப் பெற்றிருக்கலாம்.

ஓரை என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லாக இல்லாமல், வேறு மொழியிலிருந்து வந்த சொல்லாக இருந்தால், அது சுமேரிய மொழியிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. இப்போது ஈராக் என்று கூறப்படுகிற தேசம் மெசபொடோமியா என்றும் கூறப் படுகிறது. இங்கு யூபெரிடிஸ், தைகிரிஸ் என்னும் பெயருள்ள இரண்டு ஆறுகளுக்கு இடையிலே மிகப் பழையகாலத்திலே பாபிலோனியா என்றும் அசிரியா என்றும் பெயருள்ள தேசம் இருந்தது. பாபிலோனிய ராகிய அசிரியர், அக்காலத்தில் நாகரிகம் படைத்த மக்களாக இருந்தார்கள். அவர்கள் திராவிடர்களோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிகின்றனர். ஏனென்றால் அவர்களின் ஊர்ப் பெயர்கள் ஊர் என்னும் திராவிடச் சொல்லாகவே இருக்கிறது. அவர்களுடைய பழைய நகரங்கள் ஊர் என்றும், நிப்பூர் என்றும், எருதூர் என்றும் பெயர் பெற்றிருந்தன. அன்றியும் அம்மா,வீடு, யாழ் (பாட்டு இசைக்கருவி) முதலிய திராவிட மொழிச் சொற்கள் பாபிலோனிய மொழியில் காணப் படுகின்றன.

புராதன காலத்தில், திராவிடர் மத்தியதரைக் கடல் பக்கத்திலிருந்து இந்தியா தேசத்திற்கு வந்தார்கள் என்றும், இந்தியாவுக்கு வருவதற்கு முன்னே அவர்கள் இடைவழியில் பாபிலோனியா, பாரசீகம் முதலிய நாடுகளில் தங்கினார்கள் என்றும் சரித்திர ஆசிரியர்கள் (மேல் நாட்டவரும் கீழ்நாட்டவரும் ஆகிய சரித்திர ஆசிரியர்கள்) கூறுகிறார்கள். அது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டிலிருந்து பழங் காலத்தில் திராவிடராகிய தமிழர், சுமேரியா முதலிய நாடுகளுடன் கடல் மூலமாகக் கப்பலில் சென்று வாணிபம் செய்துவந்தனர் என்றும் வேறு சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு திராவிடர்களுக்கும் பாபிலோனியருக்கும் பழைய காலத்தில் தொடர்பு இருந்தது என்பது தெரிகிறது. அந்தக் காலத்தில் ஓரை என்னுஞ் சொல் பாபிலோனிய மொழியிலிருந்து தமிழில் கலந்திருக்கக்கூடும். அது மிகப் பழைய காலமாகும்.

பாபிலோனியர் ஆதிகாலத்தில் வானசாஸ்திரத்தை வளர்த்த பழங்காலத்து மக்கள் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். பாபிலோனிய குருமார்கள் வானசாஸ்திரத்தில் தேர்ந்தவர்கள். அவர்களிடத்திலிருந்து தான் அக்காலத்தில் வாழ்ந்திருந்த எகிப்தியர் முதலிய மக்கள் வான