பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

"மறைந்த வொழுக்கத் தோரையு நாளும்

துறந்த வொழுக்கங் கிழவோற் கில்லை.

99

இதன் பொருள்: மறைந்த வொழுக்கத்து - களவொழுக்கத்திலே, ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் தனக்கியல்பான விளையாட்டு களையும் நாள் வேலைகளையும் துறந்து அனவரதம் காதலிலேயே அழுந்திக் கிடக்கும் வழக்கம், கிழவோற்கில்லை - தலைவன் மாட்டுக் காணப்படுவ தொன்றன்று.

எனவே களவில் தலைவிக்குத் தன் காதலன்றிப் பிறிதெதிலும் உளங்கொள்ளாமல் முழுதும் தன்னைக் காதலுக்கே கொடுத்துப் பிறவெல்லாவற்றையும் மறந்தொழுகுதலியல்பா மென்பதும், தலைவன் அவ்வாறன்றித் தன் தகுதிக்கேற்ற விளையாட்டுகளை ஒழித்து விடாமல் ஆடியும் நாள்தோறும் தனக்குரிய தொழிலாற்றியும் வருவதுடன் ஏற்றபெற்றியால் காலமிடங் கருதிக் காதலின்பத்தையும் துய்ப்பானாவான்” என்பதும், உலகியல் கருதி இச்சூத்திரம் கூறுகின்றது.

66

'ஓரை விளையாட்டென்பது, சங்க இலக்கிய முழுதும் அச் சொல்லுக்கு அப்பொருளாட்சி யுண்மையால் விளங்கும். ஓரைக்கு இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளுண்மைக்குத் தொல் காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதனிலேனும் சான்று காணுத லறிது. மிகவகன்ற பிற்காலப் புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒரு நாளினுள் நன்மை தீமைகளுக்குரிய தாகப் பிரித்துக் கொள்ளப்படும் உட்பிரிவு) என்ற பொருளில் இச்சொல்லைப் பிரயோகிக்கலானார். அக் கொள்கைக்கே சான்றில்லாத சங்க இலக்கியத்தில், “ஓரை” யென்னும் தனித்தமிழ்ச் சொல்லுக்கு, அக்காலத் திலக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப்பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக் கொள்ளுவதே முறையாகும். அதைவிட்டுப் பிற்கால ஆசிரியர் காள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளை இத்தமிழ்ச் சொலுக்கு ஏற்றுவதே தவறாகும். அதற்குமேல் அச் சொல்லைக் கொண்டு தொல்காப்பியம் அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சி யறத்திற்கும் பொருந்தாது."

இவ்வாறு தமிழில் எழுதிய சோமசுந்தர பாரதியார் அவர்கள் இச்செய்தியையே ஆங்கிலக் கட்டுரையிலும் எழுதியுள்ளார்கள்

1. Journal of the Annamalai University, Vol. VI. P. 138.

.1