பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

51

“தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் தரமான முக்கிய நிகழ்ச்சி கி.பி. 470 -இல் நிகழ்ந்தது. வச்சிரநந்தியின் மேற் பார்வையில் மதுரையில் ஒரு திரமிள சங்கம் அமைக்கப்பட்டது தான் அந்த நிகழ்ச்சி. ... முற்காலப் பாண்டியரைப் பற்றிய சாசனங்களில் சின்னமனூர் சிறிய செப்பேட்டுச் சாசனத்தில் மட்டும (கி.பி.10ஆம் நூற்றாண்டு), தலையாலங்கானத்துப் போர்வென்ற நெடுஞ்செழிய னுக்குப் பிறகு வந்த ஒரு பாண்டியன். நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கம் குறிப்பிடப்படுகிறது. இது வச்சிரநந்தியின் சங்கத்தைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்” என்றும், தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலில் 14ஆம் பக்கத்திலும், 58, 59 ஆம் பக்கங்களிலும் எழுதுகிறார். மேலும் அந்நூல் 61ஆம் பக்கத்தில், 'வச்சிரநந்தி சங்கத்தைப்பற்றிச் சரியான சாதனங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அச்சங்ககத்தை நிறுவியவுடனே ஒழுக்க நூல்களும் இலக்கண நூல்களும் வெளிவந்திருப்பது அச்சங்கத்தின் பெரிய செயலைக் காட்டுகிறது” என்றும் எழுதுகிறார்.

66

முற்காலத்தில் பாண்டிய மன்னர் அமைத்துத் தமிழாராய்ச்சி செய்த தமிழ்ச் சங்கத்தையும் பிற்காலத்தில் வச்சிரநந்தி அமைத்த ஜைன மதப் பிரசாரச் சங்கத்தையும்ஒன்றாகப் பொருத்திக் காட்டுகிறார் வையாபுரிப்பிள்ளை. பொருத்தி காட்டுவதுடன்அல்லாமல் தொல்காப்பியர், வச்சிரநந்தி காலத்தில் (கி.பி. 470க்குப் பிறகு) தொல்காப்பிய இலக்கணத்தை எழுதினார் என்றும் கூறுகிறார். இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுகிற கதையாக இருக்கிறது.

பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கம் வேறு; வச்சிர நந்தி அமைத்த தமிழ்ச் சங்கம் (திராவிட சங்கம்) வேறு. பாண்டியர் அமைத்தது தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சிச் சங்கம். வச்சிரநந்தி அமைத்தது ஜைன சமய பிரசாரச் சங்கம். இதையறியாமல், வையாபுரிப் பிள்ளை இரண்டு வெவ்வேறு சங்கங்களையும் ஒன்றாக இணைத்துப் பிணைத்துக் குழப்பியிருக்கிறார். சாதாரண அறிவுள்ளவரும் இதனை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஆனால், வையாபுரிப் பிள்ளை யவர்கள் ஏனோ இவ்வாறு குழப்புகிறார்.

'தமிழர் வரலாறு' என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் வச்சிரநந்தியின் திராவிட சங்கம்