பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

வேறு, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் வேறு என்று தெளிவாகக் கூறுகிறார். “தமிழ்ச் சங்கம் என்று நாம் அறிந்திருக்கிற சங்கம் அன்று இது என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். இது (வச்சிரநந்தியின் சங்கம்) தமிழ்நாட்டு ஜைனர்கள் தம்முடைய மத தர்மத்தைத் தமது மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப் பாகும்”2 என்று அவர் எழுதுகிறார்.

எஸ்ை

வ்வாறு 1927 -இல் திரு. பி. தி. சீனிவாச அய்யங்கார் எழுதியிருப்பதையும் பாராமல், எஸ் வையாபுரிப்பிள்ளையவர்கள் 1956 - இல் பாண்டியரின் பழைய சங்கமும் பிற்காலத்து வச்சிரநந்தியின் சங்கமும் ஒன்று என்று கூறுகிறார். 'மதுரை”, “சங்கம்’ என்னும் இரண்டு சொற்களின் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இரண்டு சங்கங்களும் ஒன்று என்று கூறுவது அறிவுடைமையாகாது.

சங்கம் என்றார், கூட்டம், குழு, கழகம் என்பது பொருள். பௌத்த பிக்ஷுக்களின் கூட்டத்துக்கும் சங்கம் என்பது பெயர். பௌத்தர்கள் மும்மணியைக் (திரி சரணத்தைக்) கூறுகின்ற

'புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி’

என்பதில் பௌத்த முனிவர்களின் கூட்டம் சங்கம் என்று கூறப்படுவது காண்க. இதுபோன்று, ஜைன முனிவர்களின் கூட்டத்துக்கும் சங்கம் என்பது பெயர். வச்சிரநந்தி முனிவர், ஏன் திராவிட சங்கம் என்னும் ஜைன முனிவர் சங்கத்தை அமைத்தார் என்பதைக் கூறுவோம்.

சமண (ஜைன) சமயத் துறவிகளின் சங்கம் ஆதி காலத்தில் ஒரே சங்கமாக இருந்தது. அதற்கு மூல சங்கம் என்பது பெயர் பிற்காலத்தில் ஜைன முனிவர் சங்கம் பெரிதாக வளர்ந்துவிட்டது. பெரிதாக வளர்ந்து போன ஜைன முனிவர் சங்கத்தை நான்கு பிரிவாகப் பிரித்து நந்தி கணம், சேனகணம், சிம்கணம், தேவகணம் என்று பெயரிட்டார்கள். ஒவ் வொரு கணத்திலும் கச்சை என்றும் அன்வயம் என்றும் உட்பிரிவுகள் இருந்தன. இச்செய்தி ஜைனசமய நூல்களில் கூறப்படுகின்றது.

இந்த நான்கு பிரிவுகளில் நந்திகணம் பேர்பெற்றது. நந்தி கணத்தில் நாளடைவில் ஜைன முனிவர்கள் தொகை அதிகமாகி P. 247 History of the Tamils. P.T. Srinivasa Iyengar. Madras. 1927

2.