பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுகிறது போன்ற செயலாகும்.

பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கத்து நூல்களிலே காதல் வாழ்க்கைச் செய்திகளும் போர்ச் செய்திகளும் உலகியல் செய்தி களும் கூறப்படுவது யாவரம் அறிந்ததே. வச்சிரநந்தியமைத்த திராவிட சங்கமாகிய ஜைனமத சங்கத்தில், ஜைன முனிவர்கள் காதலைப் பற்றியும் போரைப் பற்றியும் லௌகிக விஷயங்களைப் பற்றியும் ஆராய்ந்தார்கள் என்று கூறுவது எவ்வளவு பேதைமை! அன்றியும் சீத்தலைச்சாத்தனார், கபிலர், பரணர், மாமூலனார், அரிசில் கிழார், நத்தத்தனார், வெள்ளிவீதியார், இடைக்காடனார், ஓரம்போகியார், மாங் குடிமருதனார் முதலிய ஜைனரல்லாத புலவர்கள் ஜைன முனிவர்களின் மத சங்கத்தில் இருந்தார்கள் என்று கூறுவது எவ்வளவு பேதைமை.

வச்சிரநந்தி அமைத்த திராவிட ஜைன சங்கத்தில் தொல்காப்பி யர் தொல்காப்பிய இலக்கணத்தை இயற்றினார் என்று கூறுவது ஆராயாமல் கூறும் வெற்றுரை யாகும். என்னை? சகர எழுத்தை முதலாகவுடைய சொற்கள் தமிழில் வழங்குவது இல்லை என்று தொல்காப்பிய இலக்கணச் சூத்திரம் கூறுகிறது.

‘கத நபம வெனுமா வைந்தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே'

(28 எழுத்ததிகாரம்)

‘சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஔவெனு மூன்றலங்கடையே’

(29 எழுத்ததிகாரம்)

சங்கம், சங்கு, சமம், சகடம், சந்து, சலம், சண்பு முதலிய சகர எழுத்தை முதலாகவுடைய சொற்கள் தமிழில் வழங்குவதில்லை என்று இந்தச் சூத்திரம் கூறுகிறது. ஆகவே இச்சொற்கள் வழங்காத காலத்தில் தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்பது விளங்குகின்றது. இவ்வா றிருக்க, திரமிள சங்கம் என்னும் பெயரையுடைய ஒரு சங்கத்தில் தொல்காப்பியர் இருந்தார். அவர் அச்சங்கத்தில் நூல் இயற்றினார் என்பது எவ்வளவு அறியாமை? 'திரமிள சங்கம்' என்னும் சகர எழுத்தை முதலாகவுடைய ஒரு சங்கத்தில் தொல்காப்பியர் அங்கத்