பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் எடுக்கப்பட்டன என்று சரியான சான்று காட்டாமல் தைரியமாக எழுதிவிட்டார்.

திரு.எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களும், இந்தச் சமஸ்கிருத மூடபக்தி ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, சுப்பிரமணிய சாஸ்திரி கூறிய அதே கருத்தைத் தமது நூலிலும் எழுதிவிட்டார். இவர், தாம் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலிலே 14, 71 ஆம் பக்கங்களில், வடமொழி நாட்டிய சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் சூத்திரக் கருத்துக்களை எடுத்துக் கொண்டார் என்று எழுதியிருக்கிறார்:6

சுப்பிரமணிய சாஸ்திரி, பரதநாட்டிய சாஸ்திரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலென்றும், ஆகவே தொல்காப்பியம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலென்றும் எழுதியுள்ளார். கீத் முதலிய சமஸ்கிருத ஆராய்ச்சியாளர்கள், பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது அன்று என்று எழுதினார்கள். அதாவது பரதநாட்டிய சாஸ்திரம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல் என்று கூறினார்கள். வடமொழியறிந்த ஆராய்ச்சி யாளர்களில் பெரும்பாலோர், பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். வையாபுரிப் பிள்ளையும் பரத நாட்டிய சாஸ்திரம் கி. பி. 4ஆம் நூற்றாண்டு நூல் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், சமஸ் கிருத பக்தியும், சமஸ்கிருதத்திலிருந்து தான் மற்ற மொழிகளில் கருத்துக்கள் எடுக்கப்பட வேண்டும் என்னும் ‘பண்டித மனப் பான்மையும் கொண்டவரானபடியினால், தொல்காப்பியம் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்:

இவர்களின் கூற்றை ஆராய்வோம்.

7

முதலில் சுப்பிரமணிய சாஸ்திரி கூறுவதை ஆராய்வோம். கீத் ஆசிரியர் பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப்

6. History of Tamil Language and Literature, (P: 14 and 76) S. Vaiyapuri Pillai, Madras. 1956.

7. History of Tamil Language and Literature by S. Vaiyapuri Pillai, Madras. 1956.