பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

கடைச்சங்க காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் என்பதும், எட்டுத் தொகையில் தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்கள் எல்லாம் அப்புலவர்களால் அக்காலத்தில் பாடப்பட்டவை என்பதும் எல்லோரும் அறிந்ததே. கடைச்சங்க காலப் புலவர்களுக்கு இலக் கணமாக இருந்தது தொல்காப்பியம் என்பதும் எல்லோருக்கும் உடன் பாடே. வையாபுரியார் கூறுவதுபோல, தொல்காப்பியம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்தால், அது எப்படி கடைச்சங்கப் புலவருக்கு இலக்கணமாக இருந்திருக்கக்கூடும்? ஆகவே, வையா புரியார் கூற்று ஏற்கத்தக்கதன்று. தொல்காப்பியம் கடைச்சங்க காலத்துக்கு முன்பு எழுதப்பட்டிருக்கவேண்டுமென்பது தெளிவாகிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்பு இரண்டாம் சங்கத்தில் தொல்காப்பியம் எழுதப்பட்டது என்றுதான் பழைய வரலாறு கூறுகின்றது.

மேலும், கடைச்சங்க நூல்களில், தொல்காப்பிய இலக்கணத்துக்கு மாறுபட்ட சொற்களும் காணப்படுகின்றன. (சங்கு, சட்டி, யூபம், யவனர் முதலியன.) வழக்கத்தில் உள்ளதும் பழைய இலக்கணத்துக்கு மாறு பட்டதுமான சொற்களை அப்புலவர்கள் தங்கள் செய்யுட்களில் வழங்கி யிருக்கிறார்கள். அப்படி வழங்கவேண்டுமானால், தொல்காப்பிய விலக்கணம் எழுதப்பட்ட நெடுங்காலத்துக்குப் பிறகு தான் அப்புதிய சொற்கள் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். அதிலும் பழங்காலத்தில் இலக்கண வரம்புக்கு மாறுபட்ட சொற்கள் புதிதாக வந்து வழங்கு வதற்கு நெடுங்காலம் சென்றிருக்க வேண்டும். எனவே, தொல்காப்பி யம் எழுதப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவ்விலக் கணத்துக்கு முரண்பட்ட புதிய சொற்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆகையால், கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்பு தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பது தெரிகின்றது. எனவே, இதனாலும் வையாபுரியார் கூறும் கூற்று ஏற்கத்தக்கதன்று என்பது நன்கு விளங்குகிறது.

பரத நாட்டியம் என்பது தமிழ் நாட்டுக்கே உரிய கலையாகும். அன்று முதல் இன்றளவும் பரதநாட்டியம் தமிழ் நாட்டில் பேரும் புகழும் பெற்று நின்று நிலவுகிறது. (அண்மைக் காலத்தில்தான் வட இந்தியரும் மேல் நாட்டு ஐரோப்பியரும் இக்கலையைப் பயிலத் தொடங்கி யுள்ளனர்.) இயல் இசை நாடகம் என்னும் மூன்று கலைகளை ஆராய்ந் தவர் தமிழ்ச் சங்கத்தார். இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ்