பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

63

என்னும் முத்தமிழ் தொன்று தொட்டுப் பேர் போனது. நாடகத்துக்கு முக்கியமான சுவைகள், மெய்ப்பாடுகள் முதலியவற்றை நாடகத் தமிழ்ப் புலவர்கள் ஆராய்ந்தனர். இசைக் கலையும் நாடகக் கலையையும் கை வளர்ப்பதற்கென்றே பாணர் என்னும் ஒரு தனிப் பிரிவினர் தமிழ் நாட்டில் இருந்தனர். பரத நாட்டியக் கலைக்கென்றே இன்றும் இசை வேளாளர் தமிழ்நாட்டில் இருக்கின்றனர் அன்றோ? நாடகத் தமிழ்ப் புலவர்கள் ஆராய்ந்த மெய்ப்பாடுகளைத் தான் தொல்காப்பியர் தமது தொல்காப்பிய இலக்கணத்தில் கூறினார். இந்த வரலாற்று வரன் முறையை அறியாதவர்கள் வடமொழிப் பரதநாட்டிய சாத்திரத்தி லிருந்து தொல்காப்பியர் கருத்துக்களை எடுத்துக்கொண்டார் என்று கூறுவது எவ்வளவு பேதைமை! இது நகைப்புக்கிடமாகவல்லவா இருக்கிறது!

6

பாரதநாட்டு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பல சாஸ்திரக் கருத்துக்களைப் பிற்காலத்தவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டதைப் போலவே, தமிழ் நாட்டில் வழங்கிய பரத நாட்டியக்கலை நூலைப் பரதநாட்டிய சாஸ்திரம் என்னும் பெயருடன் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொண்டனர். பிறகு, அந்த மொழி பெயர்ப்பு நூலை முதல் நூல் என்று கூறுகின்றனர். உதாரணமாக ஒன்று காட்டுவோம். நாடக மேடையில் அமைக்கப்படுகிற திரைக்கு எழினி என்பது பெயர். இந்த எழினி ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்து வரல் எழினி என்று மூன்று வகைப்படும். இந்தத் தமிழ் எழினியைச் சம்ஸ்கிருத நாடக நூலோர் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், எழினியைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல், எழினி, எவனி என்று கூறிக் கடைசியில் யவனிகா என்று அழைத்துக் கொண்டனர். இவ்வாறு, எழினி என்னும் தமிழ்ச் சொல் யவனிகா என்றாயிற்று என்பதை அறியாமல், அது யவன என்னும் சொல்லிலிருந்து தோன்றிற்று என்று கூறுகிறார்கள். இதுபற்றி எழினி - யவனிகா என்னும் இணைப்பு காண்க.

6

6

எனவே, வையாபுரியாரும் சுப்பிரமணிய சாஸ்திரியாரும் வடமொழிப் பற்றுச் சார்பு கொண்டு, யூகமாகக் கூறும், சான்று இல்லாதவையும் அறிவுக்குப் பொருந்தாதவையுமான கூற்றுகள், வெறும் வெற்றுரைகள் எனத்தள்ளுக.