பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

65

பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தை ஆராய்கிறார். பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னுடன் போர்செய்ய வந்த சேரன் சோழன் என்னும் இரண்டு பேரரசர்களையும் இவர்களுக்குத் துணையாக வந்த ஐந்து குறுநில மன்னர்களையும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் போர் செய்து வென்றான் என்றும், அந்தப் பாண்டியன்மீது மதுரைக் காஞ்சியை மாங்குடி மருதனார் என்னும் புலவர் பாடினார் என்றும் கூறிய பிறகு, சுப்பிரமணிய ஐயர் அப் பாண்டியன் காலத்தை ஆராய்கிறார். முடிவில், மதுரைக் காஞ்சித் தலைவனான பாண்டியன் நெடுஞ் செழியனும் வேள்விக்குடி சாசனம் கூறுகிற செழியனும் ஒருவரே என்றும் இந்தப் பாண்டியன் (நெடுஞ்செழியன் செழியன்) கி.பி. 620 முதல் 650 வரையில் அரசாண்டான் என்றும், ஆகவே, மதுரைக் காஞ்சி இயற்றப் பட்ட காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்றும் முடிவுகாண்கிறார்; அதாவது, கடைச்சங்க காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறுகிற சுப்பிரமணிய ஐயரைப் போலவே, திருவனந்த புரத்தில் சாசன இலாகாவில் இருந்த து. அ. கோபிநாதராவ் அவர்களும், கடைச்சங்க காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்று செந்தமிழ் ஆறாந் தொகுதியில், "பாண்டியர்களும் தமிழ்ப் புலவர்களும்” என்னும் கட்டுரையில் கூறியுள்ளார்.

மதுரைக் காஞ்சியின் காலமும் அப்பாட்டுடைத் தலைவனான நெடுஞ்செழியன் காலமும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்று கே.வி. சுப்பிரமணிய ஐயர் தமது கட்டுரையில் கூறியுள்ளது சரியா என்பதைப் பார்ப்போம். ஐயர் அவர்கள் காட்டும சான்றுகள் சரியானவையாக இருந்தால் அவர்கண்ட முடிவும் சரியானவையாக இருக்கும். சான்றுகள் பிழையுடையனவாக இருந்தால் அதன் முடிவும் பிழையானதாக இருக்கும். ஆகவே, அவர் காட்டும் சான்றுகள் சரியானவையா அல்லது பிழையுடையனவா என்பதை ஆராய்வோம். சுப்பிரமணிய ஐயர் தமது கட்டுரையில் காட்டும் சான்றுகளை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவை:

அ.

வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் பல்யாகசாலை முது குடுமியைக் கூறுகிறது. இந்த முதுகுடுமிப் பெருவழுதி பாண்டிய அரசர் பரம்பரையில் கடைசி அரசன். முதுகுடுமிப் பெரு வழுதியை அயல்நாட்டிலிருந்து வந்த களப்பிரர் வென்று பாண்டிய நாட்டை அரசாண்டனர். பாண்டி நாடு களப்பிர அரசர் வசம் சிலகாலம் இருந்தது.