பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஆ.

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

சிலகாலஞ் சென்ற பிறகு பாண்டியன் மரபில்வந்த கடுங்கோன் என்பவன் களப்பிரரை வென்று பாண்டிய நாட்டை மீட்டுக் கொண்டு அரசாண்டான். இந்தப் பாண்டியன் கடுங்கோன் இறையனார் களவியல் உரையில் கூறுப்படுகிற முதற்சங்க காலத்தின் இறுதியில் இருந்த கடுங்கோன் ஆவன்.

பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப்பிறகு பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்தான் என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. வேள்விக்குடி சாசனமும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதியைக் கூறிய பிறகு, கடுங்கோனின் பேரனாகிய செழியன் என்பவனைக் கூறுகிறது. ஆகவே, வேள்விக்குடி சாசனம் கூறுகிற செழியனும் மதுரைக் காஞ்சியின் தலைவனான நெடுஞ் செழியனும் ஒருவரே. இந்த நெடுஞ்செழியன் – செழியன் கி.பி. 620 முதல் 650 வரையில் அரசாண்டான். ஆகவே, அவன் காலமும் அவனைப் பாடிய மதுரைக் காஞ்சியின் காலமும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டாகும். மதுரைக் காஞ்சி கடைச்சங்க காலத்து நூல் என்று கூறுப்படுகிறபடியால், கடைச்சங்க காலம் மதுரைக் காஞ்சியின் காலமாகிய கி.பி.7-ஆம் நூற்றாண்டு ஆகும்.

இவைதாம் சுப்பிரமணிய ஐயருடைய சான்றுகளும் முடிவு களும். இவை சரியானவையா பிழையுள்ளவையா என்பதை இனி ஆராய்ந்து பார்ப்போம். ஆராய்வதற்கு முன்பு, வேள்விக்குடி சாசனத்தில் காணப்படுகிற பாண்டிய அரசர் பரம்பரையை அறிந்து கொள்வது நலம். ஆகவே, பாண்டிய அரசர் பரம்பரையை வேள்விக் குடி சாசனத்தின்படி கீழே தருகிறோம்.

வேள்விக்குடி சாசனத்தின்படி பாண்டிய மன்னர் பரம்பரை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

(வேள்விகுடியைத் தானம் கொடுத்தவன்)

|