பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பெயர் ஒற்றுமையைக் கொண்டு, வெவ்வேறு காலத்திலிருந்த இருவரையும் ஒருவர் என்று தவறாகக் கருதுகிறார் சுப்பிரமணிய ஐயர்.

முதற் சங்க காலத்தின் இறுதியில் இருந்த பாண்டியன் கடுங்கோன், கடல் கொண்ட மதுரையில் இருந்தான் என்று இறையனார் அகப் பொருள் உரையினால் அறிகிறோம்.

“அவர்களைச் (தலைச் சங்கத்தாரை) சங்கம் இரீ இயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோ னீறாக எண்பத் தொன்பதின்மர் என்க அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்க.'

என்று இறையனார் அகப்பொருளுரைப் பாயிரம் கூறுகிறது.

களப்பிரரிடமிருந்து பாண்டிநாட்டை மீட்டுக்கொண்ட கடுங் கோன், II முதற்சங்க காலத்தில் இருந்த மதுரையைக் கடல்கொண்ட பிறகு, இடைச்சங்க காலத்திலிருந்த கபாடபுரத்தையுங் கடல்கொண்ட பிறகு, இப்போதுள்ள மதுரையில் கடைச் சங்கம் இருந்து மறைந்த பிறகு அரசாண்டவன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த கடுங்கோனை யும் I பல நூற்றாண்டுகளுக்குப் பின்பிருந்த கடுங்கோனையும் II ஒன்றாகப் பிணைத்து அவ்விருவரும் ஒருவரே என்று சுப்பிரமணிய ஐயர் கூறுவது பெருந்தவறு. ஆகவே அவருடைய முடிவும் தவறாகிறது.

மேலும், கடுங்கோன் அல்லது கடுங்கோ என்னும் பெயர் அக் காலத்தில் ஓர் அரசனுக்கு மட்டும் வழங்கிய பெயர் அன்று. பல அரசர் அப் பெயரைக் கொண்டிருந்தனர். செல்வக் கடுங்கோ, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, மாந்தரன் பொறையன் கடுங்கோ என்று பெயர் பெற்றிருந்த சேர அரசர்களின் பெயர்களைக் காண்க. இதுபோன்று பாண்டிய அரசரிலும் கடுங்கோ அல்லது கடுங்கோன் என்னும் பெயருள்ள அரசர் சிலர் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே, இறையனார் அகப் பொருளுரைப் பாயிரம் கூறுகிற கடுங்கோன் வேறு, வேள்விக்குடி சாசனம் கூறுகிற கடுங்கோன் வேறு என்பது ஐயமற விளங்குகிறது.

மூன்றாவதாக:

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்தான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்துக்குப் பல தலைமுறைக்கு முன்பு