பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

“பல்சாலை முதுகுடுமியின்

நல்வேள்வித் துறைபோய

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் போல

73

மகிழ்ந்து இனிது உறைவாயாக என்று நெடுஞ்செழியனை மதுரைக் காஞ்சி வாழ்த்துகிறது. எனவே, முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிற்காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்ந்திருந்தான் என்பது தெரிகிறது. இது இவன் காலத்துக்கு மேல் வரம்பு. கீழ் வரம்பு, களப்பிரர் பாண்டி நாட்டைக் கைப்பற்றியதற்கு முந்திய காலம். அதாவது, முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பின்பும், களப்பிரர் பாண்டிய நாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்பும் உள்ள காலத்தில் நெடுஞ்செழியன் வாழ்ந்தான். இதனைச் சிறிது விளக்குவோம்.

களப்பிரர் பாண்டிநாட்டை மட்டும் கைப்பற்றவில்லை; சேரம், சோழம், பாண்டியம் என்னும் மூன்று நாடுகளையும் ஒரே சமயத்தில் கைப்பற்றினார்கள். களப்பிர அரசன் சேர, சோழ, பாண்டியர்களை வென்று அவர்களுக்குக் காலில் தளையிட்டபோது அம்மூவரும் பாடிய வெண்பாக்கள் தனிப் பாடற்றிரட்டில் காணப்படுவது இதற்குச் சான்றாகும். களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றிய காலம் உறுதியாகத் தெரியவில்லை. ஏறக்குறையக் கி.பி.300-இல் கைப்பற்றியிருக்கலாம். கி.பி.450-இல் களப்பிரப் பரம்பரையைச் சேர்ந்த அச்சுவிக்கந்தன் (அச்சுத களப்பாளன்) என்னும் அரசன் அரசாண்டான் என்பது றுதியாகத் தெரிகிறது. முதல் முதலில் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றியது ஏறக்குறையக் கி.பி.300 என்று கொள்வது தவறாகாது. ஆகவே, பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி.300-க்கு முற்பட்ட காலத்தில் இருந்தவன் என்பது தெரிகிறது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெடுஞ்செழியன் இருந்தான் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

4

பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியாது; கி.பி.300-க்கு முந்திய (களப்பிரர் வருவதற்கு முந்திய) காலத்தில் இருந்திருக்கவேண்டும் என்பதற்குச் சரித்திரச் சான்று உண்டு. அதனைச் சுருக்கமாகக் கூறுவோம்.

4.

இடம் பெருகும் என்பது பற்றி அச்சான்றுகளை இங்கு ஆராய முற்படவில்லை.