பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

5

களப்பிரர் சேர சோழ பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆண்ட போது அம்மூவேந்தரும் களப்பிரருக்குக் கீழடங்கி இருந்தார்கள். அக் காலத்தில் தொண்டைநாட்டைப் பல்லவ அரசர்கள் அரசாண்டனர். களப்பிரர் ஏறக்குறைய 250 ஆண்டு அரசாண்டனர். பிறகு ஏறக் குறையக் கி.பி.550-இல் பல்லவ அரசனான சிம்மவிஷ்ணு, சோழ நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அங்கு அரசாண்டிருந்த களப் பிரனை வென்று சோழநாட்டைக் கைப்பற்றிக்கொண்டான் என்று பல்லவ சாசனங்கள் கூறுகின்றன. இதனை வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். சிம்மவிஷ்ணு களப்பிரரிட மிருந்து சோழநாட்டைக் கைப்பற்றிய அதே காலத்தில் பாண்டியன் கடுங்கோன் களப்பிரனுடன் போர் செய்து தனது பாண்டி நாட்டை மீட்டுக்கொண்டான். வேள்விக்குடி சாசனத்தை ஆராய்ந்து அதில் கூறப்படுகிற பாண்டிய அரசர்களின் காலத்தை ஆராய்ந்து பார்த்தால் இது நன்கு விளங்கும். அதே சமயத்தில்தான் சேரனும் களப்பிரனிட மிருந்து தனது நாட்டை மீட்டுக்கொண்டான். அதாவது, பாண்டியன் கடுங்கோனும் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் சேரனும் ஒரே சமயத்தில் களப்பிர அரசர்களை எதிர்த்துப் போராடி முறையே பாண்டி நாட்டையும் சோழநாட்டையும் சேரநாட்டையும் மீட்டுக்கொண்டனர். இது நிகழ்ந்தது பல்லவ சாசனத்தின்படி ஏறக்குறையக் கி.பி.550-இல் ஆகும். சோழ நாட்டைப் பல்லவன் கைப்பற்றியபடியால் அது வரையில் களப் பிரருக்குக் கீழடங்கியிருந்த சோழர் பிறகு பல்லவ அரசர்களுக்குக் கீழடங்கியிருந்தனர். அதாவது, ஏறக்குறையக் கி.பி.300 முதல் 900 வரையில் சோழ மன்னர் முதலில் களப்பிரருக்கும் பின்னர்ப் பல்லவ மன்னருக்கும் அடங்கியிருந்தனர். இது வரலாற்று ஆசிரியர் எல்லோரும் அறிந்த வரலாற்று உண்மை இந்த வரலாற்று உண்மையை ஆதார மாக வைத்துக்கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பாண்டியன் நெடுஞ் செழியன் களப்பிரர் காலத்துக்கு முன்பு (கி.பி.300-க்கு முன்பு) வாழ்ந்திருந் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. எப்படி என்பதைக் கூறுவோம்.

தலையாலங்கானத்துப் போர்க்களத்திலே, பாண்டியன் நெடுஞ் செழியன், சேரன், சோழன் என்னும் இரு பெருவேந்தரையும் குறுநில மன்ன ராகிய ஐந்து வேளிரையும் வென்றான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.

5. இடம்பெருகும் என்பது பற்றி அதனை இங்கு ஆராயாமல் விடுகிறோம்.