பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

"இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்

பொருதவரைச் செருவென்று.

6

75

என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. “சேரன் சோழனாகிய இரு பெரு வேந்தருடனே குறுநில மன்னரும் இளைக்கும்படிப் பொருது அவரைப் போரில் வென்று” என்று நச்சினார்க்கினியர் இதற்கு உரை எழுதுகிறார்.

நெடுஞ்செழியன் போரில் வென்ற அரசர்களில் சோழனும் ஒருவன். அச்சோழன் பெருவேந்தனாக முடிபுனைந்து முரசுடை வேந்தனாக இருந்தான் என்று மதுரைக்காஞ்சியினால் அறிகிறோம். அந்தச் சோழன் கி.பி.300-க்கு முன்பு இருந்தவனாதல் வேண்டும். ஏனென்றால், கி.பி.300 முதல் 900 வரையில் சோழ மன்னர்கள் களப்பிரருக்கும் பல்லவ மன்னருக்கும் கீழடங்கியிருந்தார்கள். ஆகவே, இந்தக் காலத்தில் சோழர் பரம்பரையில் முடிபுனைந்து சுதந்தரராக அரசாண்ட பெரு வேந்தர் இருந்திருக்க முடியாது. எனவே, பாண்டியன் நெடுஞ்செழிய னுடன் போர் செய்த சோழப் பெருவேந்தன் கி.பி.300-க்கு முன்புதான் இருந்திருக்க முடியும்.

இதனால், தலையாலங்கானத்துப் போர் வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி.300-க்கு முன்னர் இருந்தவனாதல் வேண்டும் என்பது தெரிகிறது. எனவே மதுரைக்காஞ்சி இயற்றப்பட்ட காலமும், அதனை இயற்றிய மாங்குடி மருதனார் காலமும் கி.பி.300-க்கு முற்பட்ட காலம் என்பது தெரிகிறது. அதாவது, கடைச்சங்க காலம் கி.பி.300-க்கு முற்பட்ட காலம் என்பது உறுதியாகிறது.

அப்படியானால், கி.பி.300-க்கு முன்னே மதுரைக்காஞ்சி எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று கேட்கலாம். கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியிலாவது, கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலாவது மதுரைக்காஞ்சி இயற்றப்பட்டதாதல் வேண்டும் என்று சில சான்றுகளினால் தெரிகிறது. இங்கு இடம் இல்லாதபடியால், அதற்குரிய சான்றுகளைக் காட்டி இங்கு ஆராய முற்படவில்லை.

இதுகாறும் ஆராய்ந்ததன் தொகுப்பு இது : பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்விக்குடி என்னும் ஊரைக் கொற்கை கிழான் கொற்றனுக்குத் தானமாகக் கொடுத்தான். முதுகுடுமிப் பெரு வழுதிக்குப் பிறகு சில தலைமுறை கழிந்தபின் பாண்டியன் நெடுஞ்

6.

வரி 55-56.