பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

செழியன் இருந்தான். இவன்மீது மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார். நெடுஞ்செழியனுக்குச் சில தலைமுறைக்குப் பின்னர்க் களப்பிரர் என்னும் அரசர் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழகம் முழுவதையும் அரசாண்டனர். களப்பிரர் ஏறக்குறைய 250 ஆ ஆண்டு அரசாண்டனர். அக் காலத்தில் தொண்டை நாட்டைப் பல்லவ அரசர் ஆட்சி செய்தனர். கி.பி.550-இல் பல்லவ அரசன் சிம்மவிஷ்ணுவும் பாண்டியன் கடுங்கோனும் சேர மன்னனும் களப்பிரரைத் தாக்கிப் போர் செய்து அவர்களிடமிருந்து முறையே சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் மீட்டுக் கொண்டனர்.

ஆகவே, களப்பிர அரசர் வீழ்ச்சியடைந்து

சிற்றரசராயினர். சோழர் பரம்பரையினர் மட்டும் சுதந்தரம் பெறாமல் பல்லவ அரசருக்குக் கீழடங்கினார்கள். அதாவது, கி.பி.300-க்கும் 900– க்கும் இடைப்பட்ட காலம் வரையில் சோழர் களப்பிரருக்கும் பல்லவருக்கும் கீழடங்கிச் சிற்றரசராக இருந்தனர். இந்தக் காலத்தில் சோழர் பரம்பரையில் சுதந்தரராக அரசாண்ட முடிமன்னர் ஒருவரும் இலர். எனவே கி.பி.300-க்கு முன்னர் சுதந்தரராக இருந்த சோழப் பெருவேந்தனுடன் பாண்டியன் நெடுஞ்செழியன் போர் செய்து வென்றான். அந்தக் காலம் கி.பி.300-க்கு மேற்பட்ட காலம். எனவே சங்க காலம் என்பது கி.பி.300-க்கு முற்பட்ட காலமாகும்.