பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வருணன் வணக்கம்*

நிலத்தை அதன் இயற்கைக்கு ஏற்பக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பிரிவாகப் பிரித்தனர். பண்டைத் தமிழர் அவ்வாறு பிரித்த ஒவ்வொரு நிலப்பிரிவுக்கும் ஒவ்வொரு தெய்வத்தை அமைத்து வழிபட்டார்கள். மலை நாடாகிய குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன். காட்டு நிலமாகிய முல்லைக்குத் தெய்வம் மாயோன் என்னும் திருமால். வயல் நாடாகிய மருதத்துக்குத் தெய்வம் வேந்தன் என்னும் இந்திரன். கடற்கரைப் பகுதியாகிய நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன். வளம் அற்ற பாலை நிலத்துக்குத் தெய்வம் கொற்றவை ஆகிய காளி. மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் இச்செய்தி கூறப்படுகிறது.

மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

(தொல்-பொருள் அகத்திணையியல் - 5)

இந்தக் கட்டுரையிலே கடல் தெய்வமாகிய வருணனைப் பற்றிச் சிறப்பாக ஆராய்வோம். வருணன் மேய பெருமணல் உலகம் என்பது வருணனுக்கரிய நெய்தல் நிலம் ஆகும். அலைகடலைத் தமது வாழ்க்கைக் களமாகக் கொண்டு கடற்கரையில் வாழ்கின்ற பட்டின வரும், கடல் கடந்து கப்பல் வாணிகம் செய்யும் வணிகப் பெருமக்களும் பண்டைக் காலத்தில் வருணனைத் தமது வழிபடு கடவுளாகக் கொண் டிருந்தார்கள். எனவே, கடற்றெய்வமாகிய வருணன், கடற்கரை ஊர்களில் வாழ்ந்த மக்களுக்கு வாழ்வளிக்கும் தெய்வமாக விளங்கிற்று.

ருணனைப் பற்றிய செய்திகள் சங்க நூல்களில் அதிகமாகக் காணப்படவில்லை. ஏனைய முருகன், திருமால், இந்திரன், கொற்றவை

தமிழ்பொழில் 34:5. 1958.