பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

79

இவ்விரு வருணருக்கும் பெயர் ஒற்றுமை தவிர வேறு ஒற்றுமைகள் இல. இங்கு, இரண்டு வருணர்களைப்பற்றிய ஆராய்ச்சியில் புக வேண்டுவதில்லை. தமிழ் வருணனும் ஆரிய வருணனும் ஆதியில் வெவ்வேறு தெய்வங்களாக இருந்தனர். பின்னர், திராவிட தெய்வங் களுக்கும் ஆரிய தெய்வங்களுக்கும் பிற்காலத்தில் தொடர்பு கற்பிக்கப்பட்டதுபோல, இந்த வருணர்களுக்கும் தொடர்பு கற்பிக்கப்பட்டிருக்கலாம்.

பண்டைக் காலத்திலே தமிழரில் நாகர் என்னும் பெயருள்ள இனத்தினர் இருந்தனர் என்பது சங்க நூல்களினால் தெரிகிறது. நாகர் கடற்கரைப் பகுதிகளிலே வாழ்ந்தனர் என்பதும் அவர்கள் கடல்மீது கலத்தில் சென்றனர் என்பதும் தெரிகின்றன. அவர்கள் இப்போது பட்டினவர் என்று கூறப்படுகிற நெய்தல் நில மக்களின் இனத்தவர் போலும். கடற்கரைப் பக்கங்களில் வசித்த அவர்கள் வருணனை வணங்கினார்கள் போலும்.

6

வருணன் வழிபாடு, தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்ந்ததாகக் கருத வேண்டா. தமிழகத்தை அடுத்துள்ள இலங்கைத் தீவிலும் வருணன் வழிபாடு பண்டைக் காலத்தில் நிகழ்ந்தது. வருணன் வழிபாடு மட்டு மன்று, ஏனைய முருகன், திருமால், இந்திரன் வழிபாடுகளும் இலங்கைத் தீவிலே நடைபெற்றன. இலங்கையில் நிகழ்ந்த இந்தக் கடவுளர் வழி பாட்டைப்பற்றிப் பின்னர் விரிவாக ஆராய்வோம். இப்போது, வருணன் வணக்கம் இலங்கையில் நிகழ்ந்ததைப் பற்றி மட்டும் கூறுவோம்.

இலங்கைத்தீவிலே வருணன் வழிபாடு தொன்றுதொட்டு நடை பெற்றுவந்தது. தமிழ்நாட்டில் நிகழ்ந்ததுபோலவே இலங்கையிலும் வருணன் வழிபாடு கடற்கரைப் பகுதிகளிலேதான் நிகழ்ந்தன. இலங்கைத் துவின் தென்கோடியிலே, கடற்கரை ஓரத்திலே தேவுந்தா என்னும் நகரம் உண்டு. தேவுந்தர என்பது தேவிநுவர என்பதன் திரிபு. தேவிநுவர என்னும் சிங்கள மொழியின் பொருள் தேவநகரம் என்பது. தேவிநுவர என்னும் சொல்லைச் சிங்களவர் தேவுந்தர என்றும் தேநு வர என்றும் வழங்குவர். தமிழர் தனவா என்று வழங்குவர். ஆங்கிலேயர் தொண்ட்ரா என்று வழங்கினார்கள். இந்த நகரத்திலே உபுல்வன் என்னும் தெய்வத்திற்கு ஒருகோயில் இருந்தது. பேர்போன இந்த உபுல்வன் கோயிலைப் போர்ச்சுகீசியர் 18-ஆம் நூற்றாண்டில் இடித்துத் தகர்த்து அழித்துவிட்டார்கள். சிங்கள மொழியில் உபுல்வன் என்றால் வருணனைக் குறிக்கும்.