பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

81

மதத்தைச் சேர்ந்த கடற்காவல் தெய்வம்), அவனுக்குக் கல்தெப்பம் ஒன்றைக் கொடுத்து அவனைக் கரையேற்றியது.) அந்த வணிகனுக்கு ஏற்பட்ட கோயில்தான் தெவொல் கோயில்.

இந்தக் கதையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், இதில் சில உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. தமிழ் நாட்டு வாணிகனுக்கு மணிமேகலா தெய்வம் உதவிசெய்திருந்தால் அந்த நன்றிக்காக அவன் கட்டிய கோவிலில் மணிமேகலா தெய்வத்தை வைத்துப் பூசை செய்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக தெவொல் (உதகபாலன்) தெய்வத்தை வைத்துப் பூசை செய்திருக் கிறான். தமிழ்நாட்டு வாணிகன், தனக்கு உதவிசெய்த தெய்வம் உதக பாலன் ஆகிய வருணன் என்று நம்பியபடியால் அத்தெய்வத்திற்குக் கோயில் அமைத்து வழிபட்டான். தமிழருடைய பழய கடற் தெய்வம் வருணன் ஆகையால் அந்த முறைப்படி வருணனுக்குக் கோயில் கட்டி வணங்கினான். பின்னர், பௌத்த மதம் பரவிய காலத்தில், பெளத்த மதத்தின் கடற்தெய்வமாகிய மணிமேகலை வணக்கம் ஏற்பட்ட காலத்தில், தமிழ வணிகனுக்குக் கடலில் உதவிசெய்த தெய்வம் மணிமேகலைதான் (வருணன் அல்லன்) என்பதை வற்புறுத்த மணிமேகலை வணிகனுக்கு உதவி செய்தது என்னும் கதை கற்பிக்கப்பட்டதுபோலும். எனவே, தெவொல் தெய்வம் என்பது தமிழரின் வருணன் என்பது உறுதிப்படுகிறது.

பழந் தமிழ் நாட்டில் நிகழ்ந்த வருணன் வணக்கம் இலங்கைத் தீவில் எப்போது இடம்பெற்றது? இலங்கைத்தீவு பௌத்தமதத்தின் கோட்டை போன்றது. எனவே, இலங்கைத்தீவில் பௌத்த மதம் பரவிய பிறகு, தமிழரின் வருணன் வணக்கம் இலங்கையில் புகுந்திருக்க முடியாது இலங்கையில் பௌத்தமதம் புகுவதற்கு முன்பே வருணன் வணக்கம் அங்குச் சென்றிருக்வேண்டும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பௌத்தமதம் இலங்கைக்குச் சென்றது என்பது சரித்திர உண்மை. பௌத்தமதம் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பு, இலங்கையில் வாழ்ந்திருந்த மக்கள் யாதொரு தெய்வ வழிபாடும் ல்லாமல் மிருகங்களைப்போல வாழவில்லை, அவர்கள், தமிழர் வணங்கிவந்த முருகன், திருமால், இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களை வணங்கிவந்தனர். பௌத்தமதம் இலங்கையில் பரவி வேர் ஊன்றியபிறகும் பழைய தெய்வ வணக்கங்கள் மறைந்துவிட வில்லை. ஆனால், ஒரு மாறுபாடு ஏற்பட்டது. அது என்னவென்றால், புத்தர் வணக்கம் (புத்தர் வழிபாடு) முதன்மை இடம் பெற்றது: முருகன்,