பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

85

சரியானதாகத்

பொருள் என்றும் அது நீலநிறமுடைய விஷ்ணுவைக் குறிக்கும் என்றும் உத்பலவர்ணன் என்னும் சொல்லைத்தான் சிங்களவர் உ உபுல்வன் என்று வழங்கினார்கள் என்றும் பொருத்தங்காட்டினார்கள். இந்தப் பொருத்தம் வெளித்தோற்றத்திற்குச் தோன்றினாலும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும்போது உண்மைக்கு மாறான போலிரக்காரணம் என்பது விளங்கும். சிங்கள அறிஞர்கள் இதுபற்றி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். அவர்கள் கூறும் காரணத்தை இங்கு காட்டுவோம். இந்தக் காரணங்களைக் கொண்டு உபுல்வன் என்பது திருமால் ஆகிய விஷ்ணு அல்ல என்பதும், அது வருணன்தான் என்பதும் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.

ஆ.

உத்பலவர்ணன் என்பது விஷ்ணு என்பது பொருந்தாது. என்னை?

விஷ்ணுவாகிய திருமால் கருமை நிறமுடையவர். ஆகவே அவருக்குக் கார்வண்ணன், கடல்வண்ணன், மேகவர்ணன், பச்சை வண்ணன் என்றெல்லாம் பெயர் உண்டு. ஆனால் உத்பல வர்ணன் என்னும் பெயர் கூறப்படவில்லை. விஷ்ணுவுக்குரிய ஆயிரம் பெயர்களில் (சகஸ்ரநாமம்) உத்பலவர்ணன் என்னும் பெயர் காணப்பட வில்லை. ஆகவே உத்பலவர்ணன் என்பதுதான் உபுல்வன் ஆயிற்று என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. உபுல்வன் என்பது உதகபால வருணன் என்னும் கடல் தெய்வத்தைத்தான் குறிக்கும். விஷ்ணுவைச் சுட்டவில்லை.

சிங்கள மொழியில் உள்ள திஸர ஸந்தேஸம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இது ஒரு தூதுப்பிரபந்தம். இந் நூலின் 18-ஆம் செய்யுளில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படு கின்றது:-

66

ஸ்ரீயும் சரஸ்வதியும் மகிழ்ச்சியோடு உபுல்வனிடம் தங்கிய பிறகு, ஸ்ரீயை (இலக்குமியைப்) பிரிந்த காரணத்தினால் வருத்தம் என்னும் தீயினால் கருகிக் கருநிறம் அடைந்த விஷ்ணுவைப் போலக் கருநிறம் அடையாமல், பிரமன் பிரமசரியம் காத்து வெண்ணிற மாகவே இருந்தான்”.

அதாவது, பிரமன் மனைவியாகிய சரசுவதியும் விஷ்ணுவின் மனைவியாகிய ஸ்ரீயும் உபுல்வனிடத்திலே (வருணன்