பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

காவிரி வாயில் கடைமுகங் கழிந்து (நாடுகாண்.33.) காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை (நாடுகாண், 108) சாரணி பூம்பொழில் காவிரிப் பேர் யாறு (நாடுகாண், 114) விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தி. (காடுகாண்.39) காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்.

முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல்.

(அடைக்கலம், 151)

(காட்சி. 123)

91

சிலப்பதிகாரத்தில் இயற்றமிழ்ப் பகுதி முழுவதும் இந்த ஆறு ‘காவிரி’ என்றே கூறப்படுவது காண்க. இயற்றமிழ்ப் பகுதியில் ஓரிடத்தி லேனும் ‘காவேரி' என்று கூறுப்படவே இல்லை.

சிலப்பதிகாரக் காவியத்தில் கானல்வரியில் மட்டும் இளங்கோ வடிகள் காவேரி என்னுஞ் சொல்லைப் பயன்படுத்துகிறார். காவிரி ஆறு கடலுடன் கலக்கிற புகர்முகத்தண்டைக் கடற்கரை மணலிலே அமர்ந்து கோவலனும் மாதவியும் கானல்வரி பாடினார்கள். அந்த இசைப்பாடல் களிலே முதலில், தங்களுக்கு அருகில் பாய்ந்தோடுகிற காவிரி ஆற்றைப் பற்றிப் பாடின பிறகு மற்ற இசைப்பாடல்களைப் பாடினார்கள். கோவலன் காவிரி ஆற்றை மூன்று பாடல்களில் பாடினான். அம்மூன்று செய்யுள்களிலும் காவிரி ஆறு காவேரி என்று கூறுப்படுகிறது.

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி! கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய்! மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி!”

மற்ற இரண்டு பாடல்களிலும் காவேரி என்னுஞ் சொல்லே பயின்றுள்ளது.

66

66

'கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!

மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி!

'விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி!

மழவ ரோதை வளவன்றன் வளனே வாழி காவேரி!”