பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

சங்குவளைகளை மகளிர்அணிந்த வழக்கம் அண்மைக் காலத்தில் மறைந்துபோய், கண்ணாடிவளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இதனால், தமிழ்நாட்டு வாணிகருக்குக் கிடைத்துவந்த ஊதியம் இப்போது அயல்நாட்டு வாணிகருக்குப் போய்க்கொண்டிருக் கிறது. மேலும் வளை செய்யும் தொழிலும் தமிழ்நாட்டில் மறைந்துபோய் அத்தொழிலாளிகளுக்கு வேலை இல்லாமலும் போய்விட்டது. இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட்ட காலத்தில், சங்குவளை மறைந்துபோய்க் கண்ணாடிவளைகள் வழக்கத்தில் வந்து விட்டன. ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடிவளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பு சங்ககாலத்திலிருந்து சங்குவளைகளை அணியும் வழக்கம் இருந்து வந்தது.

கள்

பழங்காலத்தில் தமிழ் மகளிர் எல்லோரும் - ஏழைகள், நடுத்தரக் குடிமக்கள், செல்வர், அரசியர் முதலிய எல்லோரும்-, கட்டாயமாகக் கைவளைகளை அணிந்திருந்தனர் என்று கூறினோம். ஏழைகளும் நடுத்தர மகளிரும் இடம்புரிச் சங்குவளைகளை அணிந்திருந்தனர். இடம்புரிச் சங்குவளைகளின் விலை அதிகம் இல்லை. ஆனால் செல்வந்தரின் மகளிரும் அரசர்களின் மகளிரும் வலம்புரிச் சங்குவளைகளை அணிந்திருந்தார்கள். வலம்புரிச் சங்குவளை அதிக விலையுள்ளவை. செல்வர் வீட்டுமகளிர், பொன்னாற் செய்த தொடிகளை அணிந்திருந்ததுடன் அவற்றொடு வலம்புரிச் சங்கு வளைகளையும் அணிந்திருந்தார்கள். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியான பாண்டிமா தேவியார் கையில் பொன் தொடிகளை அணிந்திருந்ததோடு வலம்புரிச் சங்குவளைகளையும் அணிந்திருந்தார்.

"பொலந்தொடி நின்ற மயிர்வார் முன்கை

வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து.

99

என்று இச்செய்தியை நெடுநல்வாடை (அடி, 141-142) கூறுகிறது.

பெருஞ் செல்வக்குடியில் பிறந்தவரான கண்ணகியார் அணிந் திருந்ததும் வலம்புரிச் சங்குவளைகாளகத்தான் இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். என்னை? அவர் காலிலே அணிந் திருந்த பொற்சிலம்பினுள்ளே இட்டிருந்த பரல்கள் மாணிக்கக்கற்களாக இருந்தபோது அவர் கையில் அணிந்திருந்த வளைகள் வலம்புரிச் சங்குவளைகளாகத்தானே இருக்கவேண்டும்? அவர் மாநாய்கனுடைய