பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

என்று இங்குள்ள ஒரு சாசனம் கூறுகின்றது.4 வாமனா சாரியார் மல்லி சேனா சாரியாரை இன்னொரு சாசனம் குறிக்கின்றது.15 இக்கோயிலில் உள்ள குராமரத்தடியில் இவ்விருஆசாரியர்களின் பாதங்கள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. மல்லிசேனவாமனாசாரியார் மேருமந்தர புராணத்தையும் நீலகேசி என்னும் நூலுக்கு சமயதிவாகரம் என்னும் உரையையும் இயற்றியுள்ளார். (இந்நூல்கள் இரண்டும் பிரபல சமணப் பெரியாராகிய ராவ்சாகிப் அ. சக்கரவர்த்தி நயினார் M.A., I.E.S. அவர்களால் அச்சிடப்பெற்றுள்ளன.) 2000 குழிநிலம் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகின்றது. விஷார் என்னும் கிராமத்தார் விக்கிரம சோழ தேவரது 13 ஆவது ஆண்டில் இக்கோயிலுக்கு நிலம்விற்ற செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது.7 கைதடுப்பூர் கிராமச் சபையார் திருப்பருத்திக்குன்றத்து ரிஷி சமுதாயத் தாருக்குக் கிணறு தோண்டிக்கொள்ள நிலம் தானம் செய்த செய்தியை மற்றொரு சாசனம் கூறுகின்றது.18 இக்கோயிலிலுள்ள குராமரத்தைப் புகழ்ந்து கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டுள்ளது.

66

'தன்னளவிற் குன்றா துயராது தண்காஞ்சி

முன்னுளது மும்முனிவர் மூழ்கியது - மன்னவன்தன் செங்கோல் நாலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த

கொங்கார் தருமக் குரா.

16

இக்கோயிலைப்பற்றி நன்கறிய விரும்புவோர் அரசாங்கத்தார் வெளி யிட்டுள்ள ஆங்கில நூலிற் கண்டுகொள்க.19

சைதாப்பேட்டைத் தாலுகாவில் மாங்காடு கிராமத்துக் காமாட்சி அம்மன் கோயில் கல்வெட்டில் பள்ளிச் சந்தம் நிலம் கூறப்படுகிறது.20 இத்தாலுகா திரு ஆலம் தர்மீஸ்வரர் கோயில் சாசனம் தேமீஸ்வர முடைய மகாதேவரைக் குறிப்பிடுகிறது.21 இது நேமிநாதர் கோயிலாக இருக்கக்கூடும். செங்கல்பட்டுத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமமும், மதுராந்தகம் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமமும், பொன் னேரித் தாலுகாவில் அருகத்துறை, அத்த மணஞ்சேரி என்னும் கிராமங்களும், திருவள்ளூர் தாலுகாவில் அமணம்பாக்கமும் உள்ளன. இவை இங்குச் சமணர் இருந்ததைத் தெரிவிக்கின்றன.