பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

அமைந்துள்ளது. இக்கோயிலில் சாசனங்களும் காணப்படுகின்றன. கோபுரவாயிலில் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

66

'காவுவயல் சூழ்தடமும் கனத்தமணிக் கோபுரமும் பாவையர்கள் ஆடல்களும் பரமமுனி வாசமுடன் மேவுபுகழ்த் திருப்பறம்பை விண்ணவர்கள் போற்றிசெய்யத் தேவரிறை வன்கமலச் சேவடியைத் தொழுவோமே.

பூண்டி:

வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாப் பேட்டைத் தாலுகாவைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளது மான இவ்வூரில் பொன்னிவன நாதர் கோயில் என்னும் ஒரு சினகரம் உண்டு. இக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டெழுத்து அழகிய ஆ சிரியப்பாவினால் அமைந்தது. இக்கோயில் வரலாற்றினைக் கூறுகின்றது. அதில், 'செயங்கொண்ட சோழ மண்டலந்தன்னில், பயன்படுசோலைப் பல் குன்றக் கோட்டத்து; வேண்டியது சுரக்கும் மேயூர் நாட்டுப், பூண்டி என்பது காண்டகு திருநகர்' என்று இவ்வூர் கூறப்படுகின்றது. இங்கிருந்த பொன்னிநாதர் என்னும் சமணப் பெரியார் வீரவீரன் என்னும் அரசனுக்குச் சிறப்புச் செய்ய அவன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின்படி இக்கோயிலை அமைத்து, வீரவீரசினாலயம் என்னும் பெயரிட்டு, கிராமங்களையும் இறையிலியாகக் கொடுத்தான் என்று மேற்படி யப்பா கூறுகின்றது.

சிரி

இக்கோயிலிலிருந்த செம்பு உருவச்சிலை, ஆரணிக் கோயிலுக்குக் கொண்டுபோய் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வட்டாரத்தில் உள்ள சமணக் கோயில்களில் இக்கோயில் மிகப் பழமையானது.

வள்ளிமலை:

39

வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள மேல் பாடிக்கு அருகில் உள்ளது வள்ளிமலை என்னும் கிராமம். இக்கிராமத் தில் உள்ள குன்று கற்பாறைகளால் அமைந்துள்ளது. இக்குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கை யாயமைந்த ஒரு குகை உண்டு. இதன் பக்கத்தில் கற்பாறையில் இரண்டு தொகுதி சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண உருவங்களின் கீழ்க் கன்னட