பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

காணப்படுகின்றன. இக்குகையின் வாயிற் புறத்தின் மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.

“நந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது : நாகநந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன்.

எனவே, நந்திப்போத்தரசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்னும் குருவுக்காக நாரணன் என்பவன் ‘பொன் இயக்கி’ என்னும் பெயருள்ள உருவத்தை அமைத்தான் என்பது இந்தக் கல் எழுத்தின் கருத்து. இக் குகையில் காணப்படும் சாமரை பிடித்த பெண் உருவம் இதில் குறிப்பிட்ட ‘பொன் இயக்கி'யின் உருவம் என்றும், அதன் பக்கத்தில் நிற்கும் ஆண் உருவம் நாகநந்தி என்பவரின் உருவம் என்றும் கருதப்படுகின்றது.

இந்த மலையில் பொறிக்கப்பட்ட இன்னொரு கல் எழுத்தும் உண்டு. அது கி.பி. 984இல் அரசாட்சிக்கு வந்த இராசராச சோழனுக்கு கீழ்ப்பட்ட லாடராசன் வீரசோழன் என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில், இந்த மலை ‘படவூர்க் கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான் மலை' என்று கூறப்பட்டுள்ளது. இந்த லாடராசன் வீர சோழன் தன் மனைவியுடன் இந்த மலையில் இருந்த கோயிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி இக் கோயிலுக்குத் தானம் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ள அதற்கு உடன் பட்டு அவ்வரசன் 'கூறகன்பாடி கற்பூர விலை'யையும் ‘அந்நியாய வால தண்ட இறையையும்' இக்கோயிலுக்குப் “பள்ளிச் சந்தமாகக் கொடுத்தான். இக் கல் எழுத்தின் கடைப்பகுதி, 'இப் பள்ளிச் சந்தத்தைக் கொல்வான் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங்கொள்வார். இது வல்லதிப் பள்ளிச் சந்தத்தைக் கெடுப்பார் இத் தர்மத்தை ரக்ஷிப்பான் பாத தூளி என் தலை மேலன. அற மறவற்க அறமல்லது துணையில்லை' என்று முடிகின்றது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்ட கூறகன்பாடி கிராமம் என்பது, பஞ்ச பாண்டவர் மலைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உள்ள ‘கூறாம்பாடி' என்னும் கிராமம் என்று கருதப்படுகின்றது.

""

இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலைக் குகையில் உள்ள அறைகளும் சாசனத்தில் கூறப்படும் நாகநந்தி குரவர், பள்ளிச் சந்தம் என்னும் பெயர்களும் இந்தமலை ஒரு காலத்தில்