பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

125

பெரும்பள்ளி விளாகத்திற்கு, இவ்வூரைச் சேர்ந்த குன்னேரி மங்கலம் என்னும் வழுவாமொழி ஆராந்த மங்கலத்தையும் தோட்டங்களையும், கிணறுகளையும், விண்ணவ கோவரையன் வைரிமலையன் என்னும் சிற்றரசன் பள்ளிச்சந்த மாகத் தானம் செய்தான் என்றும், இந்தத் தானத்தைப் பாம்பூர் வச்சிர சிங்க இளம்பெருமானடிகளும் அவர்வழி மாணவரும் மேற்பார்வை பார்த்து வரவேண்டும் என்றும் இச்சாசனம் கூறுகின்றது. 55

விழுப்புரம் :

விழுப்புரம் தாலுகாவின் தலைநகரம். இங்கு யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் உள்ள பட்டா நிலம் என்னும் இடத்தில் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது அக்கோயில் இல்லை. இங்கு இருந்து சிதைந்து போன சமணத் திருவுருவங்கள் (Tate Park) என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம். 56

அரியாங்குப்பம் :

புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு 4 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் உள்ளது. இதனை ஓர் ஆண்டி, ‘பிரமா’ என்னும் பெயருடன் பூசை செய்துவருகிறார். 57 அரியாங்குப்பம் என்பது அருகன் குப்பன் என்பதன் மரூஉ போலும்.

பாவண்டூர் :

திருக்கோயிலூருக்குத் தென்கிழக்கில் 9 மைலில் பண்ருட்டி சாலையில் உள்ளது. இவ்வூரில், பண்டைக் காலத்தில் சமணரும் சமணக்கோயிலும் இருந்திருக்கவேண்டும். இவ்வூரில் இருந்த ரிஷபதேவரின் திருவுருவம் திருநறுங் கொண்டை சமணக் கோயிலில் இருக்கிறது.

திருநறுங்கொண்டை:

(திருநறுங்குன்றம் - திருநறுங் குணம்.) திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்கு, 12 மைலில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உண்டு. இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை அப்பாண்டைநாதர் கோயில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்குச் சந்திரநாதர் கோயிலும்