பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

-

சமணம்

133

16ஆவது ஆண்டில்

எழுதப்பட்டது.

இதில், அமண்குடி

குறிக்கப்பட்டுள்ளது. 96 மேற்படி அரசனது 23ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் 'உறையூர் கூற்றத்து அமண்குடி' யைக் கூறுகின்றது.7 இப்பெயரினால் இங்குச் சமணர் இருந்தது அறியப்படும். அமணர் எனினும் சமணர் எனினும் ஒன்றே.

பழைய சங்கடம் :

குளித்தலை தாலுகாவில் உள்ள இப் பழைய சங்கடம், மகாதான புரத்தின் ஒரு பகுதி. இங்குச் சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன.98 இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர்.

சீயாலம் :

குளித்தலை தாலுகா சீயாலத்தில் ‘சுண்டக்காபாறை' என்னும் குன்றில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.99 குத்தாலம் :

தென்காசி தாலுகாவில் உள்ள குத்தாலம் என்னும் இடத்தில் ‘பரதேசிப் பொடவு' என்னும் குன்றும் குகையும் உள்ளன. இங்கும் பண்டைக் காலத்தில் சமண முனிவர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன.

வீரப்பட்டி :

100

திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குப் போகிற பாதையின் இடது புறத்தில் உள்ள இந்த ஊருக்கருகில் அன்னவாசல் என்னும் இடத்தில் ஒரு வயலில் சமண தீர்த்தங்கரரின் திருவுருவம் காணப்படுகிறது.101 ஜம்புகேஸ்வரம் :

திருச்சி தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள, இராச கேசரி வர்மரான திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவரது 16ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனத்தில், கவிராஜப் பெரும்பள்ளி,' என்னும் சமணக் கோயில் கூறப்படுகிறது. திருமலைவாடி :

102

இங்குக் குந்தவைப் பிராட்டியார் ஒரு சமணக் கோயிலைக் கட்டினார் என்று தெரிகிறது. (S.I.I. Vol. 1. 67&68) இந்த அரசியார்