பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

பாரிசை

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

பெரியபள்ளி வயலில் நாயனார் திருமான்மலை யாழ்வார் பள்ளிச் சந்தமாய் எங்களுக்கு அர்ச்சனா போகமாய் வருகிற நிலம் இரண்டுமா, என்பது இச் சாசனத்தின் வாசகம்.112 சிதைந்துள்ள வேறு சமணத் திருவுருவங்களும் இங்கு உள்ளன.

நாரத்தமலை :

இப் பெயர் நகரத்துமலை என்பதன் திரிபு. இரட்டைப்பாடி கொண்ட குலோத்துங்க சோழ நகரத்து மலை என்று பழைய சாசனம் கூறுகின்றது. பரகேசரி வர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் காலத்துத் திருமலைக் கடம்பர் கோயில் சாசனம் இங்குள்ள சமணக் கடவுளைத் திருமான்மலை அருகத் தேவர் என்று கூறுகின்றது.113 இந்த மலையின் ஒரு பகுதிக்குத் திருப்பள்ளி மலை என்றும் மற்றொரு பகுதிக்குத் தென் திருப்பள்ளி மலை என்றும் பெயர் வழங்கப்பட்டன. திருப்பள்ளி மலையில் பெரிய சமண மடமும் கோயிலும் தென் திருப்பள்ளி மலையில் சிறிய சமண மடமும், கோயிலும், இருந்தன. இம் மடங்களுக்குரிய நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் பெரிய மடத்துக்கு இரண்டு பங்கும், சிறிய மடத்துக்கு ஒரு பங்கும் வழங்கப்பட்டன. இச் செய்திகள் பொம்மைப் பாறையின் மேற்புறத்தில் உள்ள சாசனத்தினால் அறியப்படுகின்றன. இந்தச் சாசனம் சகம் 675இல் (கி.பி. 753இல்) எழுதப்பட்டது. அது வருமாறு:

‘ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் திருப்பள்ளிமலைப் பள்ளி உடையார்களுக்கும் தென் திருப்பள்ளி மலைப் பள்ளி உடையார்களுக்கும் திருப்பள்ளி மலை நாயகர்க்கும் திருப்படி மாற்றுள்ளிட்ட நித்த நிபந்தங்களுக்குத் தென் சிறுவாயில் நாட்டுக் கொற்றமங்கலம் நான்கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் நஞ்செய் புன்செய்யும் அந்தராயமும் தோட்ட முங்குளமும் தருவ தான அச்சும் காரிய வாராட்சியும் பெட்டிபாட்டமும் பஞ்சுவிலி சந்திவிக்கிரணப் பேறு வாசற் பேறு இலாஞ்சினைப்பேறு தறியிறை செக்கிறைத் தட்டொலிப் பாட்டமும் இடையவர் வரியும் இன வரியும் பொன்வரியும் மற்றுமெப் பெயர்ப் பட்டனவும் உட்பட ஆறாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாகத் திருப்பள்ளிமலையாழ்வார்க்கு இரு கூறும் தென்திருப்பள்ளிமலை நாயகர்க்கு ஒருகூறும் குடுத்தோம். இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு புரவிலும் வரியிலும் கழிப்பித்துச்