பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

தமிழகச் சமயங்கள் - சமணம்

137

சந்திராதித்தவற் செல்வதாக இரண்டு திருமலையிலும் கல்லிலும் வெட்டி நான்கெல்லையிலும் ஸ்ரீ முக்குடைக் கல்லும் நாட்டிக் கொள்க இவை பழந்திபராய னெழுத்து வில்வவராயனெழுத்து - இவை தென்னவதரைய னெழுத்து.

பள்ளிவயல் :

ஆண்டு

114

இவை

நார்த்தமலை திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாறையில் உள்ள சாசனம், ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவரது 27ஆவது ண்டில் எழுதப்பட்டது. இதில், ‘இரட்டை பாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்து பள்ளிவயல்' நிலம் குறிக்கப் பட்டுள்ளது. அன்றியும், ‘இவ்வூர்த் திருமானைமலை அருகத் தேவற்குப் புறகரை நிலம் இரண்டுமா’ என்றும் கூறுகின்றது.115 இன்னொரு சாசனம், வீரப்பிரதாப தேவராய மகாராயர் விசெயராயர் குமாரர் தேவராய மகாராயர் சகாப்தம் 1353இன் மேல் செல்லாநின்ற இராட்சச வருடம் (கி.பி. 1431) எழுதப்பட்டது. இச்சாசனத்திலும், கடலடையா திலங்கை கொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணத்து உடையார் திருமலைக்கடம் பூருடைய நயினார் ‘பள்ளிவயல் நிலம் இரண்டுமா' என்று கூறுகிறது.'16 இவற்றால் இங்குப் பண்டைக் காலத்தில் அருகக்கடவுளுக்குரிய நிலங்கள் இருந்தது அறியப்படுகிறது. சமணர்திடல் :

இதற்குச் சமணர் குண்டு என்றும் வேறு பெயர் உண்டு. காயாப் பட்டியில் உள்ள வெண்ணாவிக் குளத்தின் புறகரையில் உள்ளது. இங்குள்ள கல்ஒன்றில் ஸ்வஸ்திஸ்ரீ. திருவெண்ணாயில் ஐஞ்ஞாற்றுவப் பெரும்பள்ளித் திருவாய்த்தல மாடம் சயவீரப் பேரிளமையான் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐஞ் ஞூற்றுவப் பெரும்பள்ளி என்னும் சமண மடமும் கோயிலும் இங்கு இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

சடையாபாறை :

இது சடையார்மலை என்றும் வழங்கப்படும். திருக்கோகர்ணத் திற்கு அருகில் உள்ள ஒரு பாறை இது. இங்குச் சமண தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது. இவ்வுருவத்தின் அருகில் ஒரு சாசனம் காணப்படுகிறது.117 இச் சாசனத்திலிருந்து, பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இங்கு இருந்த செய்தி அறியப்