பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -7

இக்கும்பனூரையும், குரந்தி, குன்றத்தூர், புத்தூர் என்னும் ஊர்களையும் அரசாண்ட சிற்றரசன் சோழகோன் என்பவனையும் புகழ்ந்து கூறுகிறது.

இருப்பைக்குடி:

148

சாத்தூர்த் தாலுகாவில் உள்ள எருக்கங்குடிக்கு அரைக்கால் மைலில் உள்ள ஏரிக்கு மேற்கில் ஒரு பாறையில் உள்ள வட்டெழுத்துச் சாசனம் உள்ளது. இச்சாசனம் பாண்டியன் சடையன் மாறன் ஸ்ரீவல்லபனது 18ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டிருந்த ‘இருப்பைக்குடி கிழவன்' என்பவன் பெரிய பள்ளியைக் கட்டி, பாழிக்குளம் என்னும் ஏரியைப் பழுதுபார்த்த செய்திகள் இதில் கூறப்படுகின்றன. இருப்பைக்குடி கிழவனுக்கு 'எட்டிச்சாத்தன்' என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. இவன் சமணனாக இருக்கவேண்டும். இவன் கட்டிய 'பெரிய பள்ளி'யும் சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை.149

பிரான்மலை :

150

திருப்பத்தூர்த் தாலுகா பிரான்மலையில் உள்ள மங்கைநாதர் கோயிலில் சாசனங்கள் உண்டு. இச் சாசனம், 'கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டு தென்கோ, நாட்டு இடையாற்றூர் பள்ளிச் சந்த நிலங்களைக் குறிப்பிடுகிறது. இங்குள்ள மற்றொரு சாசனம், கூடலூரான ஐஞ்ஞூாற்றுவ மங்கலத்து'ப் பள்ளிச்சந்த நிலங்களைக் கூறுகின்றது. 151 பள்ளிச்சந்தம் என்பது சமணப் பள்ளிக்குரிய நிலங்களாகும்.

இளையான்குடி:

பரமக்குடி இரயில் நிலையத்துக்கு 7 மைலில் உள்ளது இவ்வூர். (இவ்வூரில் சைவ அடியாரான இளையான்குடி மாற நாயனார் இருந்தார்.) இவ்வூர் சிவன் கோயிலுக்கு வெளியே சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுகிறது. இதனை ‘அமணசாமி' (சமணக் கடவுள்) என்று கூறுகிறார்கள். இவ்வூரார் வெள்ளிக்கிழமை தோறும் இந்த அம்மண சாமியைப் பூசித்து வணங்கி வருகின்றனர். இதனால், முற்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்க வேண்டும் என் பது அறியப்படுகிறது. மஞ்ச புத்தூர் செட்டிமார்கள் வழிபட்டு வருகின்றனர். இவ்வூர் ஏரிக்கரையில் ஒரு சமண உருவம் காணப்படுகிறது.

152